Friday 27 December 2013

sankaraanandham - mahaperiyava devotional songs



மகாபெரியவாளுக்கான அடியேனின் முதல் பாடல் - 30.12.2012


மஹாபெரியவா காஞ்சி மஹாபெரியவா
மண்ணுலகம் வந்த சிவனே மஹா பெரியவா
மஹாபெரியவா காஞ்சி மஹாபெரியவா
மனக்குறைகள் தீர்த்து மகிழும் மஹா பெரியவா

அன்புருவம் கொண்டவரே மஹா பெரியவா
ஆனந்தம் தரும் கோலம் மஹா பெரியவா
இன்முகம் காட்டுபவரே மஹா பெரியவா
ஈசனின் அம்சமே மஹா பெரியவா

உற்சவராய் உலா வந்தார் மஹா பெரியவா
ஊர்தோறும் நடந்தாரே மஹா பெரியவா
என்றும் அவர் புகழ் பாட மஹா பெரியவா
ஏற்றங்கள் அளிப்பாரே மஹா பெரியவா  

ஐயங்கள்  களைபவரே மஹா பெரியவா
ஒப்புயர்வு அற்ற மஹான்  மஹா பெரியவா
ஓர் பரப்பிரம்மமே  மஹா பெரியவா
ஔடlதம்  நமகென்றும்  மஹா பெரியவா
(மஹா பெரியவா. . . )

 கண் கொண்டு பார்த்திட்டால் மஹா பெரியவா
காருண்யம் பொங்கிடுமே மஹா பெரியவா
கிட்டிடுமே கைலாயம் மஹா பெரியவா
கீர்த்திகளை பாடி மகிழ்வோம் மஹா பெரியவா

குறையொன்றும்  வாராதே மஹா பெரியவா
கூப்பி உம்மை  கை தொழுதால்  மஹா பெரியவா
கெட்டியாக  பாதம் பற்ற  மஹா பெரியவா
கேட்ட வரம்  அருள்வீரே மஹா பெரியவா
 
கை தொழுதால்  கை கொடுப்பீர் மஹா பெரியவா
கொட்டும் மேளம் மனதினுள்ளே மஹா பெரியவா
கோடி சந்திர  பிரகாசரே  மஹா பெரியவா
கெளபீன தாரியே  மஹா பெரியவா  


19.02.2013
மஹாபெரியவா  காஞ்சி மஹாபெரியவா
மஹான்களின்  மஹானே மஹாபெரியவா
மஹாபெரியவா   காஞ்சி மஹாபெரியவா
மஹிமை பல புரிந்தவரே  மஹாபெரியவா

சந்திரப்  ப்ரகாஸரே  மஹாபெரியவா
சாந்த  ஸ்வரூபியே  மஹாபெரியவா
சிருங்கார  காமாக்ஷியே  மஹாபெரியவா
சீர் செய்வார்  நம் வாழ்வை மஹாபெரியவா

சுற்றி சுற்றி வந்தாரே மஹா பெரியவா 
சூழ்ந்த துன்பம் நீக்கிடவே  மஹாபெரியவா
சென்ற இடம் யாவிலும் மஹாபெரியவா
சேவிப்போர்  குறை தீர்த்தார்  மஹாபெரியவா

சைதன்யம் மிகுந்தவரே மஹாபெரியவா
சொக்கிடும் மகிமை புரிவார் மஹாபெரியவா
சோகங்கள்  தீர்த்திடுவார்  மஹாபெரியவா
சௌக்கியமாய்  வாழ வைப்பார்  மஹாபெரியவா
(மஹா பெரியவா . . .)

 தங்கிடும் அருள் தருவார் மஹாபெரியவா
தாங்கிடுவார் நம் துன்பம் மஹாபெரியவா
திண்ணமாய்  வாழச்செய்வார்  மஹாபெரியவா
தீர்த்திடுவார் ஐயங்களை  மஹாபெரியவா

துன்பக்  கடலில்  வீழ்ந்தோரை  மஹாபெரியவா
தூக்கி விட்டே அருள் புரிவார் மஹாபெரியவா
தெற்றுப் பல்  தெரிய சிரிப்பார்  மஹாபெரியவா
தேற்றிடுவார்  நம் மனதை  மஹாபெரியவா

தைரியம் அளிப்பாரே  மஹாபெரியவா
தொங்கிய முகம் கண்டால் மஹாபெரியவா
தோணியாய்  உதவிடுவார்  மஹாபெரியவா
தோற்கச் செய்வார் தோல்வியை  மஹாபெரியவா


மஹாபெரியவா  காஞ்சி மஹாபெரியவா
மஹாவித்யை நிறைந்தவரே மஹாபெரியவா
மஹாபெரியவா  காஞ்சி மஹாபெரியவா
மஹாசிவ  தரிசனமே  மஹாபெரியவா

நம்பியே கும்பிட்டால் மஹாபெரியவா
நாளும்  நம்மை காப்பாரே மஹாபெரியவா
நிலவு முகம்  கொண்டவரே மஹாபெரியவா
நீலகண்ட சிவனுருவே  மஹாபெரியவா

நுரை போல கரையச் செய்வார்  மஹாபெரியவா
நூல் சிக்கல் வாழ்வினையே   மஹாபெரியவா
நெற்றி காண வெற்றி தருவார் மஹாபெரியவா
நேத்திர  தீட்சை அளிப்பார்  மஹாபெரியவா

நைந்த வாழ்வை பூக்கச் செய்வார்  மஹாபெரியவா
நொடிப் பொழுதில் வினை தீர்ப்பார்  மஹாபெரியவா
நோகாமல் நோய் தீர்ப்பார்  மஹாபெரியவா
நோக்கிட அவர்  நவ நிதி தரும்  மஹாபெரியவா

மஹாபெரியவா  காஞ்சி மஹாபெரியவா
மஹான்களின்  மஹானே மஹாபெரியவா
மஹாபெரியவா   காஞ்சி மஹாபெரியவா
மஹிமை பல புரிந்தவரே  மஹாபெரியவா  


மஹாபெரியவா  காஞ்சி மஹாபெரியவா
மண்ணுலகை காக்க வந்த மஹாபெரியவா
மஹாபெரியவா காஞ்சி மஹாபெரியவா
மஹிமை பல புரிய வந்த மஹாபெரியவா

பற்றுக்களை விட்டவரே மஹாபெரியவா 
பார் போற்றும் ஞானியே மஹாபெரியவா
பிஞ்சு மனம் கொண்டவரே மஹாபெரியவா

பீதாம்பரம் தவிர்த்தவரே  மஹாபெரியவா 
புன்சிரிப்பால் உலகாள்வார் மஹாபெரியவா
பூப்போல முகம் மலர்வார் மஹாபெரியவா
பெற்றிடுவோம் பேரின்பம் மஹாபெரியவா
பேறு பெற்றோம் இப்பிறப்பால் மஹாபெரியவா
பைசாசத்தை விரட்டிடுவார் மஹாபெரியவா
பொற்பாதம் அதனையே மஹாபெரியவா
போற்றிடுவோம் எந்நாளும் மஹாபெரியவா
பௌ ருஷம் தருவீரே மஹாபெரியவா

மஹாபெரியவா காஞ்சி மஹாபெரியவா
மஹா வித்யை  நிறைந்தவரே மஹாபெரியவா
மஹாபெரியவா  காஞ்சி மஹாபெரியவா
மஹா சிவ தரிசனமே மஹாபெரியவா

 மனக்கவலை தீர்ப்பாரே மஹாபெரியவா
மாற்றிடுவார் தலையெழுத்தை மஹாபெரியவா
மிரட்சியை போக்கிடுவார் மஹாபெரியவா
மீட்டிடுவார் துயரக் கடலில் மஹாபெரியவா
 முழு நிலவாய் முகம் கொண்ட மஹாபெரியவா
 மூர்க்கரையும் மனம்  மாற்றும் மஹாபெரியவா
மெல்லிய பாதம் கொண்டு மஹாபெரியவா
மேகமாய் விரைந்து அருள்வார் மஹாபெரியவா
 மை விழி  அதை காண  மஹாபெரியவா
மொட்டாய்  முகம் மலர்ந்திடுமே மஹாபெரியவா
மோனத் தவம் புரிவாரே மஹாபெரியவா
மௌ ன  மொழி  பேசி சிரிப்பார் மஹாபெரியவா
வரும் துயரை போக்கிடுவார் மஹாபெரியவா
வாரி அருளை வழங்கிடுவார் மஹாபெரியவா
விஞ்சியவர் யாருமில்லை மஹாபெரியவா
வீற்றிருப்பார் குரு மூர்தமாய் மஹாபெரியவா

உலகெங்கும் அருள்பவரே மஹாபெரியவா
ஊற்றாய் அருள் புரிவாரே மஹாபெரியவா
வெண்ணிலவின் குளிர்  ஒளியே மஹாபெரியவா
வேண்டியதை தந்திடுவார் மஹாபெரியவா

வைரம் போல் ஜொலி ப்பாரே மஹாபெரியவா
ஒருமுறை பார்த்திடவே மஹாபெரியவா
ஓர் குறையும் வாராதே மஹாபெரியவா
ஔ டதமே  அவர் பார்வை மஹாபெரியவா

மஹாபெரியவா காஞ்சி மஹாபெரியவா
மண்ணுலகம் வந்த சிவனே மஹா பெரியவா
மஹாபெரியவா காஞ்சி மஹாபெரியவா
மனக்குறைகள் தீர்த்து மகிழும் மஹா பெரியவா

மஹாபெரியவா  காஞ்சி மஹாபெரியவா
மஹாவித்யை நிறைந்தவரே மஹாபெரியவா
மஹாபெரியவா  காஞ்சி மஹாபெரியவா
மஹாசிவ  தரிசனமே  மஹாபெரியவா






காஞ்சியில் அருள்புரியும் மாமுனியே 05.02.2013
(நாதர் முடி மேல் இருக்கும் நல்ல பாம்பே )


காஞ்சியில் அருள்புரியும் மாமுனியே - உந்தன்
காலடி பணிந்தோம் காப்பீரே
காஞ்சி மாநகரமது உள்ளவரையில் -உந்தன்
காமகோடி பீடம் அது அருள் சுரக்கும்

நெற்றியின் வெண்ணீரை கண்டதுமே - அது
வெற்றியை தந்திடுமே வாழ்வினிலே
பற்றிட உந்தன் பொற்பாதம் அது
பெற்றுத் தந்திடுமே நற்கதியே

அபயத் திருகரத்தினை கண்டதுமே - வாழ்வில்
ஜெயம் வந்து சேர்ந்திடுமே ஜகத் குருவே
சகாயம் நீர் புரிந்திடுவீர் சற்குருவே - என்
அபயக் குரல் கேட்டு அருள் புரிவீர்

பழி பாவச் செயல்கள் நான் பல புரிந்தேன் - உன்
விழி பார்வையால் என்னை வழி நடத்து
சுழி போட்டு உன் பெயரை சொல்லி மகிழ்ந்தேன் - என்
வழி மாற்றி வழி காட்டு உன் வேல் விழியால்

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
காமாக்ஷி சங்கர காமகோடி சங்கர
காமகோடி சங்கர காமாக்ஷி சங்கர
-
தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர். 05.02.2013





27.03.2013
(ரோஜா மலரே ராஜ குமாரி)

ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர
ஜெய ஜெய சங்கர ஹரஹர சங்கர
காஞ்சி சங்கரரே
காமகோடி சங்கரரே
காமகோடி சங்கரரே

விழுப்புரம் தலத்தில் பிறந்திட்டீர் நீரே
முழு பரம் பொருளாய் ஸ்வாமி நாதரே
முழு மதி போல வளர்ந்தீர் நீரே
பழுத்த சிவமாய் காட்சி தந்தீரே

பாடம் படித்தீர் பாங்குடன் நீரே
வேடம் புனைந்தீர் வேற்று நாட்டானாக
நாட்டம் கொண்டீர் நமசிவாயன் மேல்
பட்டனர் போல மேடம் வந்தீரே

திண்டிவனத்தில் ஓர் நாள் மாலை
வண்டி இன்றி நடந்து சென்றீரே
ஆண்டி கோல ஆச்சார்ய குருவை
வேண்டி மகிழ்ந்து வரம் பெற்றிடவே

பாலகன் உந்தன் பரசிவ முகத்தை
கோல மா முனிவர் கண்டு கொண்டாரே
ஞாலம் புகழும் நாளைய ஞானி
வேலவன் பெயரில் வந்தாரென்றே

பள்ளிக்கு சென்ற சிறுவன் ஸ்வாமியே
கள்ளத் தனமாய் காஞ்சி மாமுனியை
மெல்ல தரிசித்த நல்ல செய்தியை
லக்ஷ்மி தாய் கேட்டு மகிழ்ந்தாளே

பலகையில் எழுதி படித்தது போதும்
பலகைகள் உம்மை கூப்பித் தொழவே
கலவை அழைத்தார் காருண்ய மூர்த்தி
பலமாக மாறியது உம வாழ்வே




03.04.13
(ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா - மெட்டு )

ஆலடியில்  இறங்கிவந்த   தட்சிணா மூர்த்தியே
காலடியில்  பிறந்துவந்தாய்  ஆதியில் சங்கரா
காஞ்சியில்  அருள வந்த    காலடி சங்கரா
செஞ்சுடர்  சிவனே நீர்   காஞ்சியின்  சங்கரா

பாலாற்றின் கரையினிலே  காஞ்சி மாமுனியே
காலூன்றி அமர்ந்தீரே  காஞ்சி மாமுனியே
நால்  வேதம்     வளர்த்தீரே   காஞ்சி மாமுனியே
சொல்லி மகிழ்வோம் உம் புகழே காஞ்சி மாமுனியே

ஓரிக்கை  தலத்தினிலே  காஞ்சி மாமுனியே
பேரிகை முழங்கிட  காஞ்சி மாமுனியே
அபயகை    காட்டி அமர்ந்த    காஞ்சி மாமுனியே
கூப்பி கை   தொழுவோமே  காஞ்சி மாமுனியே

சொற்கோயில்  தேவாரம்  காஞ்சி மாமுனியே
பொற்கோயில்  பல கண்டோம்   காஞ்சி மாமுனியே
கற்கோயில்   கண்டு மகிழ்ந்தோம்  காஞ்சி மாமுனியே
நற்கோயில்   உன்பாதமே  காஞ்சி மாமுனியே

பக்தர்களின்  குறைதீர்க்கும்  காஞ்சி மாமுனியே
சக்தி சிவ    ரூபனே  காஞ்சி மாமுனியே
முக்தி தந்தாய்   பக்தனுக்கே   காஞ்சி மாமுனியே
பக்தியோடு   தொழுவோம் உனை  காஞ்சி மாமுனியே

விழுப்புரத்தில் பிறந்தவரே  காஞ்சி மாமுனியே
முழுப்பரப்  பிரம்மமே  காஞ்சி மாமுனியே
அழும் முன்னே   காப்பவரே  காஞ்சி மாமுனியே
அழுவோமே   ஆனந்தமாய்   காஞ்சி மாமுனியே

ஆதி சங்கரர்     வழி வந்த   காஞ்சி மாமுனியே
ஆதியந்தம்   அறிந்தவரே  காஞ்சி மாமுனியே
ஆதங்கம்    அறிந்தே  காஞ்சி மாமுனியே
ஆதரிப்பீர்   அன்புடனே  காஞ்சி மாமுனியே

காருண்ய  ரூபனே  காஞ்சி மாமுனியே
நேரும் துன்பம்   தீர்ப்பவரே   காஞ்சி மாமுனியே
பாருக்குள்ளே   ஜெகத்குருவே   காஞ்சி மாமுனியே
யாருமில்லை    உனையன்றி  காஞ்சி மாமுனியே 





21.04.2013
உள்ளம் உருகுதய்யா - இறைவா
உனைப் பற்றி கேட்டாலே
அள்ளி திருநீற்றை பூசிய நெற்றி
ஆனந்தம் தந்திடுதே - இறைவா

வெள்ளை மனதுடனே - நீ
வேதனை தீர்த்தவனே
எல்லை  இல்லாதது உந்தன்
மகிமை மஹா ஸ்வாமியே

பாடிப் பரவசமாய் உனையே
போற்றிட தோணுதய்யா
தேடி வந்திடவே உனையே
தேவைகள் தீர்த்தாய் ஐயா

நாடி நலம் பெறுவோம் உந்தன்
காஞ்சி கருவறையே
வாடி வருவோரின் குறையை
விரட்டி அடிப்பாய் ஐயா

காஞ்சி மஹா ஸ்வாமியே உந்தன்
காலடி பணிந்திடவே
எஞ்சிய வாழ்வினிலே நீரே
விஞ்சிய வரமருள்வீர்

நெஞ்சினில் உமை நிறுத்த நீரே
சஞ்சலம் தீர்த்திடுவீர்
பஞ்சினில் எண்ணெய் அது ஆவி ஆதல் போல்
எஞ்சிய பிரப்பரறுப்பீர்






மஹா பெரியவாளின்  பொற்பாதங்களை 
பற்றி(ட)ய அடியேனின் 25வது பாடல் !
(
எதீறு கனனு -சங்கராபரணம் படப் பாடல் மெட்டு)

காஞ்சியில்  அருளும்  காஞ்சி மாமுனியே
காருண்ய  விழியால் கருணை காட்டி
காத்திடுவீரே  காலமெல்லாம் எம்மை
காபந்து செய்வீர் கற்பகத் திருவே

தலையால்  உம்மை வணங்கிட நீரே
தலையெழுத்தை  மாற்றி    தலை தூக்கச்செய்வீர்
தலை தாழ்த்தி எங்கள்   அஞ்சுதலை சொல்ல
தலை அசைத்து நீரே   ஆறுதலை தருவீர்

கண்களால் உம்மை   கண்டதும் உடனே
கண்மூடி கிறங்குவோம்   மஹா ஸ்வாமி
கண்ணீராக    குறைகள் வெளியேறும்
கண் திறப்பதற்குள்  குறை தீர்ப்பீரே

செவிகள் இரண்டினை பெற்றதன் பலனாய்
செவி சாய்த்து  கேட்போம்    உன்திருக்  கதையை
செவியார கேட்டு   மனதாற மகிழ்ந்து
சேவித்து பலன் பெறுவோம்     மஹா ஸ்வாமியே

மூச்சால்  உன்னை     ஊஞ்சலாட்டுவோம்
மூச்சுள்ள வரையில் நீ     உறைவாய் என்னுள்
மூச்சும் பேச்சும்    உனைப்பற்றிடவே
இச்ஜெகத்தில்    இருக்க அருள் புரிவீரே

வாயால் வார்த்தைகள்     பேசியே  கழித்தோம்
வாயாற உன்னை    போற்றிட அருள்வீர்
வாயாற பாடி     வணங்கியே மகிழ்வோம்
வாய்த்திட வாய்ப்பே   வழங்குவீர் வள்ளலே

கைகளால்  பல பிழை   செய்தோம்  நாங்கள் 
கை கூப்பி  வணங்கிட  கைமாறு செய்வீர்
கைநிறை தானங்கள்   அளித்தே மகிழ்வோம்
கைநிறை  அருளை   தருவீர்  குருவே

கால்போன  போக்கில்    நடந்தே போனோம்
கால்பங்கு  வாழ்வை  வீணாய் கழித்தோம்
காலடி சிவனாம்   சங்கரர் வழியில்
எம் காலடி  தொடர்ந்திட   அருள்வீர் குருவே

அஷ்டாங்க நமஸ்காரம்    செய்திடு  வோமே
அஷ்ட சித்தியும் அருள்வீர் குருவே
அஷ்டா க்ஷரமும்     பஞ்சா க்ஷரமும்
இஷ்ட சித்தியாய்  அருள்வீர் குருவே



வேதத்தின் உருவே  நாதத்தின் திருவே


வேதத்தின் உருவே  நாதத்தின் திருவே
சாதகம் செய்திட பூமிக்கு வந்தீர்
வேதனை பொறுத்து சாதனை செய்தீர்
மதங்களை பொறுத்து மனிதத்தை  வளர்த்தீர்

விழுப்புரம் தலத்தில் விதையாய் முளைத்து
முழு பரம் பொருளாய் காஞ்சியில் அமர்ந்தீர்
முழுதாய் வேதத்தை காத்தீர் நீரே
மழு மான் ஏந்திய சிவனே  நீரே

காலாற  நடந்து  கானகம் கடந்தீர் 
மாலறியா  சிவன்  மண்ணுக்குள்  கண்டீர்
பாலமாய் அமைந்தீர் ஆன்மீகம்  வளர 
ஞாலம் தழைக்க நானிலம் நடந்தீர்

செஞ்சடை சிவனாய்  உலா வந்தீரே
நஞ்சுண்ட கண்டனாய்  நலம் புரிந்தீரே
நெஞ்சிடை குமுறலை  நிமிடத்தில் தீர்த்தீர்
எஞ்சிய வாழ்வை இனித்திட செய்வீர்

கல்கண்டு பிரசாதம் தந்தே நீரே
பல்லாண்டு கவலையை பறந்திட செய்வீர்
எல்லை இல்லா உன்கரு ணையினால்
தொல்லைகள் தீர்த்து துளிர்த்திட செய்வீர்

ப்ரத்யக்ஷ  காமாக்ஷி நித்தியம் நீரே
நர்த்தன நடராஜ சிவனும் நீரே
அர்த்த நாரியாய் அருளும் குருவே
அர்த்த புஷ்டியாய் சிரிக்கும் திருவே

குருபரம் பரையில்  சிறந்தவர் நீரே
ஒரு பரம் பொருளாய்  இருந்தீர் நீரே
சிவ பரம் பொருளாய் சேவிக்க உம்மை
இக பர    சுகங்கள்  தருவீர் நீரே

காஞ்சியில் அருளும் சங்கர ரூபனே
எஞ்சிய வாழ்வை உன்வழி நடக்க
தஞ்சம் அடைந்தேன் உன் திரு பாதம்
நெஞ்சம் மகிழ அருள்வீர் நிதமும்

கருணா கரனே  கருமா முகிலாய் 
அருள் மா  மழையே பொழிவீர் நீரே
குருவே அருள்வீர் குறைகள் களைந்தே
திருவே உந்தன்  திருவடி தொடர 


02.05.2013
(தெளிசிதே மோட்சமு  - மெட்டு)

சந்திர சேகர  சரஸ்வதி  ஸ்வாமியே
சந்திரனை சூடிய சுந்தர ஈஸ்வரா
உன் திரு  உருவையே  உளமாற  நினைத்திட
வந்திடும்  வெற்றியே  வாழ்வினில் என்றுமே

விழுப்புரத்தில்  பிறந்த முழு நிலா முகத்தோனே
கழுபிணி  தீர்த்திடும் காருண்ய ரூபனே
முழு பரம்  பொருளாய்  உனைச்  சரண்  அடைந்திடவே
முழுவதும்  காத்திடுவாய்  முற்பிறப்பும் அறிந்தவனே

முக்தி தலமாம்  காஞ்சியில்   முழு நிலவாய்  அமர்ந்தவா
முக்கண்ணனின் அம்சமாய் முக்தியும் தந்தவா
எக்கணமும் ஈசனை  எண்ணியே  வாழ்ந்தவா
முக்கனியின் சுவையாகும்  உன் நாமம் பெரியவா

வேதத்தை காத்திட வந்திட்ட சங்கரா
பாதத்தை பற்றும் முன் பரிவுடன் காப்பவா
மோகத்தை வென்று  நீ   மோன தவம் புரிந்தவா
யாகத்தை வளர்த்து நீ  ஞாலத்தை  காத்தவா

அரும் தவ  ஞானியே  அனைத்துமே  அறிந்தவா
வரும் துன்பம் அறிந்து நீ  விரட்டிடுவாய்  வேல் விழியால்
கரு மேக   மழையாய்  அருள்  மழையை  பொழிவாய்
கருணை விழிப்பார்வையால்  மன இருளை போக்கிடுவாய்

நேரும் துன்பம் நீக்குவாய்  நேர்த்தியாய் வழி நடத்தி
பேருமபுகழும் பெற்றிடுவோம்  பரமனே உன் பாதம் தொழ
ஊரும் பேரும் கேட்டு நீ  ஊழ்வினைகள் களைவாய்
யாரும் குருவாய் ஏற்றிட எங்கும் காத்து அருள்வாயே

நித்திய அனுஷ்டானம் நிர்மலமாய் செய்தாய்
பத்திய உணவு  உண்டு பாரினை காத்தாய்
சத்திய வாழ்க்கையை  சாதித்துக்  காட்டினாய்
நித்திய மங்களம்  அனைவருக்கும் அளித்தாய்

காஞ்சியின் சங்கரா  காலடி சங்கரா
காலங்கள் கடந்தவா காமகோடி சங்கரா
காலமெல்லாம்  உன்புகழ்  சொல்லிடுவோம் சங்கரா
காலடியை  தொடர்ந்திடுவோம் காப்பாற்று சங்கரா

தித்திக்கும் கல்கண்டை  தந்திடுவாய் கைகளில்
தித்திக்கும் வாழ்கையை சித்திக்கச் செய்வாய்
எத்திக்கும் வேதங்கள்  ஒலித்திட செய்தாய்
சித்திக்கும்  சகலமும் உன் நாமம் சொல்லவே





23.05.2013
பத்தும் அருள்வார் பரமனாய்  பரமாச்சாரியார்
(பிரம்ம முராரி - மெட்டு )

ஒருமுறை   காஞ்சி  மாநகர்  சென்று
ஒருபரம்  பொருளான காஞ்சி மாமுனியை
ஒருமுறை  தரிசித்து மனக்குறை  கூறிட
ஒருகுறை   இன்றி வாழ்வோம்  நாமே

அம்மை அப்பனாய்  அகிலம் போற்றும்
இம்மையும் மறுமையும் அறிந்த மாமுனியே
தாயும் தந்தையாய்  தயை  புரிவாரே
அத்வைத  ஞானி சத்குரு  ஸ்வாமி

மும்மூர்த்தி  ரூபமாம் காஞ்சி மாமுனியே
சிவவிஷ்ணு  பிரம்மனாய்  அருள்புரி வாரே
ஆக்கல்  காத்தல்  அழித்தல்  புரிவார்
மூன்று பிறப்பிலும் துணையே  அவரே

நான்முகன்  பிரம்மனாய்  நமக்குள் விதைப்பார்
நால்வேத சாரம் நமக்குள் வளர
நான்கு காலமும் இறைவனை  நினைத்து
நாற்  திசை  நடந்து நானிலம் காத்தார்

ஐந்து  எழுத்தான் வந்திட்டான் மண்ணில்
ஐயங்கள் களைய  இவரின் உருவில்
ஐந்தெழுத்தை தினம் ஓதிடச் செய்தார்
தலைஎழுத்தை மாற்றி   தலைதூக்கச் செய்தார்

ஆறு முகனின் பெயர் கொண்டிவரே
ஆறாக பாய்ந்தார் மண்ணில் எங்கும்
ஆறாத துயரை தீர்த்தே மகிழ்ந்தார்
ஆறு காலமும் ஆன்மிகம் வளர்த்தார்

ஏழு ரிஷிகளின் வாழ்வைப் போல
ஏழு வயதில் வாழ்ந்தார் இவரே
ஈரேழு வயதில் ஜகத்குரு ஆனார்
ஈரேழு லோகமும் போற்றிட வாழ்ந்தார்

அஷ்ட    திக்கு பாலகர் போல
எட்டு திக்கிலும் பக்தரை  காத்தார்
எட்டாக் கனியாம் வேதத்தை இவரே
எட்டிடச் செய்தார் அனைவர்க்கும் எளிதாய்

நவகோள் களினால் வந்திடும் துன்பத்தை
இவர்கோல்  கொண்டு நமை காத்திட்டார்
நவரசம் ததும்ப நவின்றிட்  டாரே
நவநவமாய் பல கதைகள்  நமக்கே

பத்து தலை இராவணன்  பக்தியை போல
பத்து திசை   இவரின் புகழ்  பரவியதே
பத்தோடு பதினொன்றாய்  மண்ணில் வாழ்ந்தார்
பத்தோடு ஆறும் அருள்வார் இவரே

23.05.2013
காஞ்சியில் உறையும் சந்திர சேகரர்
காலடி வந்த ஆதி சங்கரர்
காலடி பணிந்திட சந்திர சேகரர்
பலப்பல  தெய்வமாய் அருள்வார் உடனே

விக்னங்கள் களைவார் விக்னேச்வரனாய்
விரைந்தே அருள்வார் வேல்விழி முருகனாய்
விம்மிட அம்மையாய் ஆறுதல் அளிப்பார்
விழியால் வழி நடத்திடுவார் சிவனாய்

மனபலம் தருவார் ஹனுமானாக
தனம தருவார் தனலக்ஷ்மியாகி
மனம் இலகிடுவாறே ஸ்ரீ ராமன் போல
தினம் தொழுவோம் குருவாக இவரை

நோய்களை தீர்த்திட தன்வந்திரி ஆவார்
பேய்களை விரட்டிட பிடாரி ஆவார்
ஓய்ந்திட தொல்லைகள் ஓயாமல் காப்பார்
செய் முன் தாய் போல் பாய்ந்தே காப்பார்

சரஸ்வதி தேவியே கலைகள் வளர்ப்பார்
சரஸ்வதி  நதியாய் மறைந்தே அருள்வார்
சிவச்துதி பாடிட சிவமாய் ஜொலிப்பார்
பலச்துதியாக பலர் குறை தீர்ப்பார்

குழந்தையை கண்டதும் கிருஷ்ணனாய் சிரிப்பார்
மழலை மொழியால் அருளைப் பொழிவார்
நிழலாய் நம்முடன் துணை வருவாரே
பழ வினை தீர வழி நடத்திடுவார்

அமர்ந்தே அருள்வார் தட்சிணா மூர்த்தியாய்
நடந்தால் இவரே நடராஜன் ஆவார்
சயனத்தில் இவரே ஆனந்தனை அருள்வார்
பயணத்தில் இவரே பகலவன் ஆவார்

நிலம்பட வீழ்ந்திட பலம் அருள்வாரே
நீர் போல் நம் வினம் ஓடிட செய்வார்
கற்றாய் நம்முள் உறவார் சுவாசமாய்
ஆகாயம் போல் அவர் ஆசிகள் பெறுவோம்

அக்னியே நம் குறை சுட்டேரிப்பாரே
முக்கனி சுவை போல் பேசிடுவாரே
முக்கண்ணன் போல் மும்மலம் தீர்ப்பார்
சிக்கல்கள் தீர்த்து சிரித்தே மகிழ்வார் 




24.05.13
பாதுகா பஞ்சகம்

போற்றிட காஞ்சி மகானின் திருவடி
பெற்றிடுவோம் வாழ்வில் என்றும் உயர்வே
காற்றாடி போல் வானில்  பறப்போம் நாமே
நூற் பிடி  என்றும் அவர்கை  இருக்க

போற்றிடுவோம் காஞ்சி மகானின் திருவடி
வென்றிடச் செய்வார் வாழ்வில் நமையே
குன்றிடச் செய்வார் குறைகள் தனையே
நின்றிடச் செய்வார் நலன்கள் அனைத்தும்

போற்றிட காஞ்சி மகானின் திருவடி
பெற்றிடுவோம் வாழ்வில் என்றும் இன்பம்
கற்றிடுவோம் வாழ்வில் கல்லாத வையே
பெற்றிடுவோம் நாம் பொற்காலம் வாழ்வில்

போற்றிடுவோம் காஞ்சி மகானின் திருவடி
ஏற்றிடுவோம் நாம் குருவாய் அவரை
ஏற்றிடுவோம் ஓர் தீபம் தினமே
பெற்றிடுவோம் வாழ்வில் ஒளியை நாமே

போற்றிட காஞ்சி மகானின் திருவடி
வெற்றிட மனதில் இறைவன்  அமர்வான்
கற்றிட கடவுளின் கருணையை நாமே
முற்றிட பக்தி முக்தியும் கிட்டும்




Pls check the following link  to read the book in pdf format...

https://drive.google.com/?urp=http://googlesystem.blogspot.in/2008/06/google-doc#all