Sunday 21 April 2013

கோரிக்கை நிறைவேற்றும் ஓரிக்கை கானம்

கோரிக்கை நிறைவேற்றும் ஓரிக்கை கானம் 
(பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் - மெட்டு )

ஓரிக்கை சென்றிட கோரிக்கை நிறைவேறும்
ஓர்  அபயக்  கையை தரிசிப்போமே
பாரினை வலம் வந்த கார் மேகம் இவரே
ஓரிணை  இல்லா  மஹாஸ்வாமி  அவரே

நம்பி கை கூப்பிட நம் வாழ்க்கை  மலரும்
நம்பிக்கை வளர்ந்து நலம் பெறுவோமே
கும்பிட்ட கையை இறக்கிடும் முன்னே
நம் வினை தீரும் மஹா ஸ்வாமி  அருளால்

கூப்பி கை தொழுதே  அவர் பாதம் பற்றிட
காப்பார் நம்மை காருண்ய  சிவனாய்
வேப்பிலை கசப்பாய் வாழ்வில் தவித்தோர்
வேதனை தீர்த்து அருள்வார்  அவரே

நம்பிக்கை இழந்தோர்  வாழ்வில் தாழ்ந்தோர்
எம்பியே குதித்திட  செய்வார் இவரே
தும்பிக்கையான் போல்  அமர்ந்தே இவரே
அம்பிகை உருவில் காப்பார் இவரே

பலகையில்  அமர்ந்தே பல கை  கூப்பச் செய்வார்
உலகை வ
ம் வந்த உத்தமர் இவரே
வலக்கை அருள்தரும்  இடக்கை  ஆற்றிடும்
உலக்கையாய்  இவர் நிமிர்த்திடுவாரே

சிலர் கை  கூப்பிட  சிலையாய் நிற்பார்
சீட்டிகை  போட்டே சீறிடுவாரே
இலக்கை மீறி  இழிசெயல்  புரிந்தோரை
உலக்கை பார்வையால் வழி மாற்றிடுவார்

கைமாறு கருதாது கைமேல் பலனளிப்பார்
கைகூப்பி வணங்கிட கண் மலர்வாரே
கைங்கர்யம் செய்வோர்க்கு  கருணா  மூர்த்தியே
கைலாய சிவனாய்  காட்சி தருவாரே

இரு கை கூப்பி சரணடைந் திடவே
ஒருகை  கூப்பி வாழ்வளிப்பாரே
மறுகை  அறியாமல் கைமாறு செய்வார்
இருக்கையில் அமர்ந்தே உலகை அறிவார்

-தேனுபுரீஸ்வர தாசன் இல. சங்கர்
Pls see my songs other songs on mahaperiyavaa :


Songs by shanks on periva.proboards :



















"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

Thursday 11 April 2013

ஓரிக்கை நோக்கி கை கூப்புவோம் 09.04.2013

ஓரிக்கை நோக்கி கை கூப்புவோம் 
(சரவணப்  பொய்கையில்  நீராடி - மெட்டு )
ஓரிக்கை  தலம்  வர சீராகுமே - வாழ்வில் 
பேரின்பம் பெற்றே மகிழ்வோமே 
பேரிடர் வாழ்க்கை பொசுங்கிடுமே  - வேரில் 
நீரிட்ட செடியாய் மலர்வோமே 
 
ஓரிக்கை தலத்தின் மஹா ஸ்வாமியே  - நம் 
கோரிக்கை யாவும் நிறைவேற்றுவார் 
பேரிகை  முழங்கிடும் மனதினிலே - ஸ்வாமியின் 
விரி கையை  கண்டதும் விடிந்திடுமே 
 
 
நீரிடை தாமரையாய் அவர் வாழ்ந்தார்  - நம்மை 
பரிசிலாய்  கரை சேர்ப்பார்  வாழ்வினிலே 
விரிசடை சிவனாய்  உலா வந்தார் - அவர் 
பாரிடை பலமுறை நடந்தாரே 
 
விரிகடல் போன்ற நம்  துயர் தீர்க்க - நாளும் 
இவரின் பாதத்தை போற்றிடுவோமே 
பரிதவித்தே  வாழ்வில் துவண்டு போனோர் - இவர் 
சிரிப்பினை கண்டதும் சிலிர்தெழுவார் 
 
சரிவினை வாழ்வில் சந்தித்தோரை - இவர் 
பரிவுடன் ஏணியாய்  ஏற்றிடுவாரே
எரிமலை  போல் வாழ்வில்  துயர் அடைந்தோர்  - இவர் 
தரிசனம் பெற்றிட தழைப்பாரே 
 
ஓரிக்கை தலமே  வந்திடவே - நம் 
தரித்திரம் நீங்கியே தனம் பெறுவோம் 
கோரி  கை  கூப்பிடவே  மஹா  ஸ்வாமி 
ஓரிரு கை  தூக்கியே வாழ்த்திடுவார் 
 
 
காரிருள் வாழ்வில் கலந்குவோர் வாரீர்  - நம் 
ஓரிக்கை தருமே ஒளி வாழ்வே 
நேரிடும் துன்பங்கள்  நீங்கிடுமே  - நாம் 
போரிட்ட வாழ்வே பொன்னாகுமே 
 
 
மாரியாய்  அருள்மழை  பொழிவாரே - நம் 
ஓரிக்கையில் காஞ்சியின்  மஹா ஸ்வாமியே 
சீரிய வாழ்வை சீக்கிரம் அருள்வார் - அவர் 
உயரிய எண்ணங்கள் கொண்டோர்க்கு 
 
நரிபோல் சூதோடு  பரி போல் ஓடி  - நம் 
கரியான வாழ்வை மாற்றிடுவோம் 
சரியான பாதையில்  செல்வோமே - நாம் 
ஓரிக்கை தலத்தை  வணங்கிடவே 
 
-தேனுபுரீஸ்வரதாசன்  இல.சங்கர் 
09.04.2013