Tuesday, 6 May 2014

SHANKARAANANDHAM


எண்ணிரண்டும் ( 8x2=16, பதினாறும்) அருளும்
ஏகாம்பரசிவ மஹா ஸ்வாமி கானம்

(ஆண்டவனே உன் பாதங்களை நான்
கண்ணீரால் நீராட்டுவேன் - மெட்டு )

காஞ்சியிலே அருள் காமாட்சி தாசனே - உன்
காருண்ய ரூபம் காண - எங்கள்
கவலைகள் கரைந்து கண்ணீராய் வெளியேறிடும்...
மஹா ஸ்வாமி . . .

என் இரண்டு   கை கூப்பி   உன் திரு முகம் காண
முன் பிறந்த ஜென்மத்தின்  முன் வினை தீர்ப்பீரே
எண்ணிரண்டும் அருள்வீரே எந்நாளும் சற்குருவே
இன்னும் ஓர்  ஜென்மம் உமை போற்ற அருள்வீரே

  
உன் இரண்டு கண் காண   உள்ளம் உருகிடுமே
கண் இரண்டும் காந்தமென   மனதை கார்ந்திடுமே
விண்ணை ஆளும் விஸ்வேஸா   மண்ணை ஆள வந்தீரே  
என்னை ஈர்த்தாட்கொண்டீர்   எங்கள் சிவ  தவநேசா

கண் இரண்டு போதுமோ  உன் திரு உரு காண
காதிரண்டும் போதுமோ  உன்னருள் மொழி கேட்க
பாதம் இரண்டும் உன் பாதை  பற்றியே நடந்திடவே
வேதம் நான்கும் தந்தவரே  பாதை காட்டி அருள்வீரே

 -தேனுபுரீஸ்வர தாசன் இல. சங்கர் 29.04.2014மஹா பெரியவாளின் அருட்கடாட்சத்தினால் 30.12.12 முதல் இன்று வரை இச் சிறியேனுக்கும்  அருள் செய்யும் பொருட்டு என்னை எழுதுகோலாக பயன்படுத்தி 180க்கும் மேற்பட்ட பாடல்களை எழுத அருள் புரிந்துள்ளார்.  2013 டிசம்பரில் மஹாஸ்வாமிகளின் 21ம் ஆண்டு ஆராதனையின் போது  21 பாடல்களை சங்கரானந்தம் என்னும் தலைப்பில் மஹாஸ்வாமிகளின் பேரருளால் 6000 பிரதிகள் பதித்து இலவசமாக மஹா பெரியவாளின் பக்தர்களுக்கு வழங்கி மகிழும்  வாய்ப்பினை அளித்தார். 

தற்போது மஹாஸ்வாமிகளின் பிறந்த வருடமாகிய ஜய வருடத்தில் 121வது ஜெயந்தி நாளான வைகாசி அனுஷத்தில் (ஜூன் 12 ) 121 பாடல்களை புத்தக வடிவில் வெளியிட்டு அனைவருக்கும் வழங்கி மகிழ மஹாஸ்வாமிகளின் பாதார விந்தங்களை பணிந்து ஆசி கோருகிறேன்.  120 பக்கங்களில் 5000 பிரதிகள் அச்சிட ரூ.1,10,000 தேவைப்படுகிறது.

     மஹா பெரியவாளின் பக்தர்களாகிய தாங்களும் இப்பெரும் புண்ணிய பணியில் ஈடுபட விரும்பினால் குறைந்த பட்சம் தலா ரூ.108 அனுப்பினால் கூட போதும்.  அனுஷத்தன்று காஞ்சி மடத்திற்கு வரும் பக்தர்களுக்கு உங்கள் சார்பில் இரண்டு பக்தர்களுக்கு இப்புத்தகத்தை  வழங்கியும் தங்களுக்கு 2 புத்தகங்களை தபாலிலும் சேர்ப்பிக்கிறேன். அதிக அளவில் புத்தகங்களை பெற்று தங்களது வட்டத்தில் விநியோகிக்க விரும்பும் அன்பர்களும் அலை பேசியில் அணுகவும்.


BANK ACCOUNT DETAILS :


L. SHANKAR
STATE BANK OF INDIA
TAMBARAM BRANCH , CHENNAI 45.

A/C NO. 10565278389
IFSC Code: SBIN0001243
S. THANUJA
INDIAN BANK
RAJAKILPAKKAM CHENNAI - 73.
A/C. NO. 792752550
IFSC Code: IDIB000R053

 
For those who wish to contribute to SHANKARAANANDHAM book to be released on June12th., 2014
pls contact :

L. SHANKAR   99404 47 437 ,  98847 18 324
( 8  to  10 pm.  only  please)

104 ARAVIND NAGAR , MADAMBAKKAM, CHENNAI - 126.

Those who paid in bank,
Pls send your address (for sending book) to  madambakkamshanks@yahoo.com

Monday, 14 April 2014

ஜய ஜய ஜய ஜய ஜய சங்கரா

ஜய ஜய   ஜய ஜய   ஜய சங்கரா
ஜகத் குருவே ஸ்ரீ காஞ்சி சங்கரா
 
 
ஜெயம் ஜெயம் ஜெயம் தரும் மஹா சுவாமி
ஜெகம் புகழ் ஜெகத் குரு மஹா சுவாமி
 
ஜய வருடத் திலே மஹா சுவாமி
ஜனனமே கொண் டீரே மஹா சுவாமி
 
 
ஜயம்  தர உலகிற்கே மஹா சுவாமி
ஜென்மம் ஒன்றெடுத்தீர் மஹா சுவாமி
 
ஜெய வருடம் கண்டோம் மஹா சுவாமி
ஜன்ம சாபல்யம் பெற்றோம்  மஹா சுவாமி
 
ஜெகத் ரட்சகரே மஹா சுவாமி
ஜெகதீஸ் வரனே மஹா சுவாமி
 
ஜெகதாம் பிகையாய்  மஹா சுவாமி
ஜெகத்தினை காத்திட்டீர் மஹா சுவாமி
 
ஜெகமுள்ள வரையில் மஹா சுவாமி
ஜெகத் குரு நீரே மஹா சுவாமி
 
ஜய ஜய   ஜய ஜய   மஹா சுவாமி
ஜெயம் அருள்வீரே மஹா சுவாமி
 
-தேனுபுரீஸ்வர தாசன் இல.சங்கர்.
14.04.2014  10.35pm.
 
மஹா ஸ்வாமிகள் பிறந்த ஜய வருடத்தில் நாம் வாழ்வது நம் முன்னோர்கள் செய்த நற்பேறாகும்.  இவ்வருடம் முழுவதும் மஹா சுவாமிகளின் அதிஷ்டானத்தை மாதம் ஒரு முறையேனும் சென்று தரிசிப்போம்.

Wednesday, 1 January 2014

அஞ்சனையின் மைந்தனுக்கோர் கானம் - ஹனுமத் ஜெயந்தி 01.01.2014

அஞ்சனையின் மைந்தனுக்கோர் கானம் 

ராம ராம    ராம ராம   ராம ராம   ராம்
ராம ராம    ராம ராம   ராம ராம   ராம்

ராம ராம    ராம ராம   ராம ராம   ராம்
ராம ராம    ராம ராம   ராம ராம   ராம்


அஞ்சனையின் மைந்தனே ஆஞ்சநேயனே
ஆதவனின் சீடனே ஆஞ்சநேயனே
இலங்கையை அழித்தவனே ஆஞ்சநேயனே
ஈசனின் அம்சமே ஆஞ்சநேயனே (ராம ராம )

உன்னத பிறப்பெடுத்தாய் ஆஞ்சநேயனே
ஊக்கமதை தந்திடுவாய் ஆஞ்சநேயனே
என்றும் உன்ன வணங்குவோருக்கு ஆஞ்சநேயனே
ஏற்றங்கள் தந்திடுவாய் ஆஞ்சநேயனே (ராம ராம )

ஐந்துமுகதுடன்  அருள்பவனே ஆஞ்சநேயனே
ஒப்பில்லா வீரனே ஆஞ்சநேயனே
ஒதிடுவாய் ராம நாமம் ஆஞ்சநேயனே
ஔடதம் அது தானே ஆஞ்சநேயனே (ராம ராம )

           -தேனுபுரீஸ்வர தாசன் இல.சங்கர்.