Monday, 14 April 2014

ஜய ஜய ஜய ஜய ஜய சங்கரா

ஜய ஜய   ஜய ஜய   ஜய சங்கரா
ஜகத் குருவே ஸ்ரீ காஞ்சி சங்கரா
 
 
ஜெயம் ஜெயம் ஜெயம் தரும் மஹா சுவாமி
ஜெகம் புகழ் ஜெகத் குரு மஹா சுவாமி
 
ஜய வருடத் திலே மஹா சுவாமி
ஜனனமே கொண் டீரே மஹா சுவாமி
 
 
ஜயம்  தர உலகிற்கே மஹா சுவாமி
ஜென்மம் ஒன்றெடுத்தீர் மஹா சுவாமி
 
ஜெய வருடம் கண்டோம் மஹா சுவாமி
ஜன்ம சாபல்யம் பெற்றோம்  மஹா சுவாமி
 
ஜெகத் ரட்சகரே மஹா சுவாமி
ஜெகதீஸ் வரனே மஹா சுவாமி
 
ஜெகதாம் பிகையாய்  மஹா சுவாமி
ஜெகத்தினை காத்திட்டீர் மஹா சுவாமி
 
ஜெகமுள்ள வரையில் மஹா சுவாமி
ஜெகத் குரு நீரே மஹா சுவாமி
 
ஜய ஜய   ஜய ஜய   மஹா சுவாமி
ஜெயம் அருள்வீரே மஹா சுவாமி
 
-தேனுபுரீஸ்வர தாசன் இல.சங்கர்.
14.04.2014  10.35pm.
 
மஹா ஸ்வாமிகள் பிறந்த ஜய வருடத்தில் நாம் வாழ்வது நம் முன்னோர்கள் செய்த நற்பேறாகும்.  இவ்வருடம் முழுவதும் மஹா சுவாமிகளின் அதிஷ்டானத்தை மாதம் ஒரு முறையேனும் சென்று தரிசிப்போம்.