Wednesday 20 February 2013

மஹாசிவ தரிசனமே மஹாபெரியவா 28.02.2013

மஹாபெரியவா காஞ்சி மஹாபெரியவா
மண்ணுலகம் வந்த சிவனே மஹா பெரியவா
மஹாபெரியவா காஞ்சி மஹாபெரியவா
மனக்குறைகள் தீர்த்து மகிழும் மஹா பெரியவா


சந்திரப்  ப்ரகாஸரே  மஹாபெரியவா
சாந்த  ஸ்வரூபியே  மஹாபெரியவா
சிருங்கார  காமாக்ஷியே  மஹாபெரியவா
சீர் செய்வார்  நம் வாழ்வை மஹாபெரியவா
சூழ்ந்த துன்பம் நீக்கிடவே  மஹாபெரியவா
சென்ற இடம் யாவிலும் மஹாபெரியவா
சேவிப்போர்  குறை தீர்த்தார்  மஹாபெரியவா
சைதன்யம் மிகுந்தவரே மஹாபெரியவா
சொக்கிடும் மகிமை புரிவார் மஹாபெரியவா
சோகங்கள்  தீர்த்திடுவார்  மஹாபெரியவா
சௌக்கியமாய்  வாழ வைப்பார்  மஹாபெரியவா

மஹாபெரியவா  காஞ்சி மஹாபெரியவா
மஹான்களின்  மஹானே மஹாபெரியவா
மஹாபெரியவா   காஞ்சி மஹாபெரியவா
மஹிமை பல புரிந்தவரே  மஹாபெரியவா

தங்கிடும் அருள் தருவார் மஹாபெரியவா
தாங்கிடுவார் நம் துன்பம் மஹாபெரியவா
திண்ணமாய்  வாழச்செய்வார்  மஹாபெரியவா
தீர்த்திடுவார் ஐயங்களை  மஹாபெரியவா

துன்பக்  கடலில்  வீழ்ந்தோரை  மஹாபெரியவா
தூக்கி விட்டே அருள் புரிவார் மஹாபெரியவா
தெற்றுப் பல்  தெரிய சிரிப்பார்  மஹாபெரியவா
தேற்றிடுவார்  நம் மனதை  மஹாபெரியவா

தைரியம் அளிப்பாரே  மஹாபெரியவா
தொங்கிய முகம் கண்டால் மஹாபெரியவா
தோணியாய்  உதவிடுவார்  மஹாபெரியவா
தோற்கச் செய்வார் தோல்வியை  மஹாபெரியவா

மஹாபெரியவா  காஞ்சி மஹாபெரியவா
மஹாவித்யை நிறைந்தவரே மஹாபெரியவா
மஹாபெரியவா  காஞ்சி மஹாபெரியவா
மஹாசிவ  தரிசனமே  மஹாபெரியவா

நம்பியே கும்பிட்டால் மஹாபெரியவா
நாளும்  நம்மை காப்பாரே மஹாபெரியவா
நிலவு முகம்  கொண்டவரே மஹாபெரியவா
நீலகண்ட சிவனுருவே  மஹாபெரியவா

நுரை போல கரையச் செய்வார்  மஹாபெரியவா
நூல் சிக்கல் வாழ்வினையே   மஹாபெரியவா
நெற்றி காண வெற்றி தருவார் மஹாபெரியவா
நேத்திர  தீட்சை அளிப்பார்  மஹாபெரியவா

நைந்த வாழ்வை பூக்கச் செய்வார்  மஹாபெரியவா
நொடிப் பொழுதில் வினை தீர்ப்பார்  மஹாபெரியவா
நோகாமல் நோய் தீர்ப்பார்  மஹாபெரியவா
நோக்கிட அவர்  நவ நிதி தரும்  மஹாபெரியவா

மஹாபெரியவா  காஞ்சி மஹாபெரியவா
மண்ணுலகை காக்க வந்த மஹாபெரியவா
மஹாபெரியவா காஞ்சி மஹாபெரியவா
மஹிமை பல புரிய வந்த மஹாபெரியவா
பற்றுக்களை விட்டவரே மஹாபெரியவா 
பார் போற்றும் ஞானியே மஹாபெரியவா
பிஞ்சு மனம் கொண்டவரே மஹாபெரியவா
பீதாம்பரம் தவிர்த்தவரே 
மஹாபெரியவா 
 

புன்சிரிப்பால் உலகாள்வார் மஹாபெரியவா
பூப்போல முகம் மலர்வார்
மஹாபெரியவா பெற்றிடுவோம் பேரின்பம் மஹாபெரியவா
பேறு பெற்றோம் இப்பிறப்பால்
மஹாபெரியவா  
பைசாசத்தை விரட்டிடுவார் மஹாபெரியவா
பொற்பாதம் அதனையே
மஹாபெரியவா
போற்றிடுவோம் எந்நாளும்
மஹாபெரியவா
பௌ ருஷம் தருவீரே
மஹாபெரியவா
மஹாபெரியவா காஞ்சி மஹாபெரியவா
மஹா வித்யை  நிறைந்தவரே
மஹாபெரியவா
மஹாபெரியவா  காஞ்சி மஹாபெரியவா
மஹா சிவ தரிசனமே
மஹாபெரியவா
மனக்கவலை தீர்ப்பாரே மஹாபெரியவா
மாற்றிடுவார் தலையெழுத்தை மஹாபெரியவா
மிரட்சியை போக்கிடுவார் மஹாபெரியவா
மீட்டிடுவார் துயரக் கடலில் மஹாபெரியவா

முழு நிலவாய் முகம் கொண்ட மஹாபெரியவாமூர்க்கரையும் மனம்  மாற்றும் மஹாபெரியவா மெல்லிய பாதம் கொண்டு மஹாபெரியவா
மேகமாய் விரைந்து அருள்வார்
மஹாபெரியவா
 


மை விழி  அதை காண  மஹாபெரியவா
மொட்டாய்  முகம் மலர்ந்திடுமே
மஹாபெரியவா
மோனத் தவம் புரிவாரே
மஹாபெரியவா
மௌ ன  மொழி  பேசி சிரிப்பார்
மஹாபெரியவா
 

வரும் துயரை போக்கிடுவார் மஹாபெரியவா
வாரி அருளை வழங்கிடுவார்
மஹாபெரியவா
விஞ்சியவர் யாருமில்லை
மஹாபெரியவா
வீற்றிருப்பார் குரு மூர்தமாய்
மஹாபெரியவா

உலகெங்கும் அருள்பவரே
மஹாபெரியவாஊற்றாய் அருள் புரிவாரே மஹாபெரியவா
வெண்ணிலவின் குளிர்  ஒளியே
மஹாபெரியவா
வேண்டியதை தந்திடுவார்
மஹாபெரியவா

வைரம் போல் ஜொலி ப்பாரே
மஹாபெரியவா
ஒருமுறை பார்த்திடவே
மஹாபெரியவா
ஓர் குறையும் வாராதே
மஹாபெரியவா
ஔ டதமே  அவர் பார்வை
மஹாபெரியவா


"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

Monday 18 February 2013

உனைப் பார்த்து மகிழ்வோமே மாமுனியே

உனைப் பார்த்து மகிழ்வோமே மாமுனியே
(உனைப் பாடும் தொழிலன்றி வேறு  இல்லை - மெட்டு )

உனைத்  தேடி வந்தேனே காஞ்சியிலே
எனைக் காத்து அருளுவாயே   மாமுனியே
உனைக் காண உயர்வோமே வாழ்வினிலே
உனைப் பார்த்து மகிழ்வோமே மாமுனியே
பெரியவா  மஹா பெரியவா

காஞ்சியில்  அமர்ந்திட்ட காலடி சங்கரா  - நீ
வாஞ்சையுடன்  அருள்புரியும்  காமாக்ஷி  சங்கரா
செஞ்சுடர்  முகம் அதனில் புன்சிரிப்பே என்றும்
அஞ்சிடும் பக்தருக்கு  ஆர்ப்பரிப்பே

நெஞ்சம்முழுதும்   சஞ்சலம் கொண்டு தவித்தேனே - நீ
பஞ்சாய்  அவற்றை பறக்கச்  செய்வாயே
தஞ்சம் அடைந்திட்ட  பக்தருக் கருளும் தயாபரனே - நீ
மஞ்சள் மாலை வெய்யிலாய்  அருளும் மகேஸ்வரனே

அஞ்ஞான  இருளை நீக்க வந்த ஆதவனே - நீ
விஞ்ஞானத்தால் மெய்ஞானம் வளர்த்த வேதியனே
நஞ்சை உண்ட நீலகண்டனாய்  காப்பவனே - நீ
பஞ்சை போல் இப்பூவுலகில் வாழ்ந்து காட்டியவா

மஞ்சத்தை  தவிர்த்து காஞ்சியில் அமர்ந்த குருபரனே - எங்கள்
நெஞ்சத்தை கொள்ளை கொண்ட நஞ்சுண்ட கண்டனே
செஞ்சுடர் வண்ண காவி உடுத்திய  செந்தாமரையே  - நீ
வெஞ்சுடர் நெற்றியில் வெண்ணீறு பூசிய வெள்ளி நிலவே

பிஞ்சு மனத்தால்  பிதற்றிட உடன் அருள் புரிபவனே - உன்
அஞ்சு விரலால் அஞ்சும் நெஞ்சிற்கு அபயம் அளிப்பவனே
பஞ்சு திரியாய்  வாழ்ந்து பகலில் ஒளி தந்தவா  - உன்
பிஞ்சு நெஞ்சம் சொன்னதை பஞ்சாய் பற்றிட முயல்வோமே

                                - தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர். 18.02.2013


"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

Tuesday 12 February 2013

ஜெய் சாயி நாதா ஜெகத்குரு நாதா 09.02.13

(பிரம்ம முராரி - மெட்டு)

ஓம் சாயி   நாதா   ஸ்ரீ  சாயி    நாதா
வந்தேன் உந்தன் பூப்பாதம்  காண
ஜெய் சாயி   நாதா   ஜெகத்குரு   நாதா
ஜெயமே தருவாய் வாழ்வில் என்றும்

துவாரக மாயியில்  அமர்ந் தருள்பவனே
கவலைகள் யாவும் தீர்த் தருள்வாயே
துணியின் வெம்மையை  உணர்ந்திட்ட  உடனே
மனமது  குளிர்ந்திடும்  சாயி   உன் அருளால்

இரு காலை   மடக்கி நீ    அமர்ந்திட்ட   கோலம்
வருவோர்  துயர் தீர்க்கும்   நாளும் நாளும்
இரு  கண்கள்    போதாதே   உன் உரு    காண
இரு கரம்   கூப்பி  தொழுதேன்   நானே

சர்வமும் நீயே சத்குரு சாயி
கர்வத்தை  அழிப்பாய்   உன் காந்தக்    கண்ணால்
ஆர்வம் மேலிட அழைத்திட உன்னை
ஓர்வரம்   அளிப்பாய்  ஒப்பற்ற சாயி

அறுபது    ஆண்டுகள் நீ    அமர்ந்திட்ட    இடமே
அறுத்திடும் ஆயிரம் ஜென்மத்தின்  பாவத்தை
சிறு மனம்   கொண்ட என்    சிக்கல்கள்   தீர்த்து
மறு பிறப்பின்றி  அருள்வாய் சாயி

பசித்தவர் புசித்திட  ருசியுடன் சமைத்தாய்
கசிந்திட கண்ணீர் பொறுப்பாயோ  நீயே
யாசித்திட்ட  யாவர்க்கும் யோசிக்காமல்  அருளினாய்
மாசில்லாத மனம் கொண்ட மஹேஸ்வரன் நீயே

கால் விரல்     இடையில்  கங்கையை வரவைத்தாய்
பால் போல்  மனத்தால் பலருக்கும்   அருள் செய்தாய்
கால் மடித்தமர்ந்த   காருண்ய   ரூபனே
மால் அயன்     போற்றிடும்    மஹேஸ்வரன்     நீயே

வந்தவர்க்   கெல்லாம் வரங்கள் தந்தாய்
நொந்திட்ட  மனதிற்கு  சந்தனம் பூசினாய்
செந்தனல் சாம்பலால் நோய்கள்  தீர்த்தாய்
இந்து முஸ்லீம்    இடையினில்   பாலம்    அமைத்தாய்

ஸ்ரீ ராம   நவமியை  மசூதியில் செய்தாய்
சந்தன கூட்டை இந்துவாய் செய்தாய்
செந் தூரம் பூசி ஹனுமனை வைத்தாய்
வந்தோரை  காத்திடும் வைகுண்ட வாசனே

-தேனுபுரீஸ்வர தாசன் இல .  சங்கர்  09.02.2013

"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

Wednesday 6 February 2013

காஞ்சியில் அருள்புரியும் மாமுனியே

(நாதர் முடி மேல் இருக்கும் நல்ல பாம்பே )

காஞ்சியில் அருள்புரியும்  மாமுனியே - உந்தன்
காலடி பணிந்தோம் காப்பீரே
காஞ்சி மாநகரமது  உள்ளவரையில் -உந்தன்
காமகோடி பீடம் அது அருள் சுரக்கும்

நெற்றியின் வெண்ணீரை கண்டதுமே - அது
வெற்றியை தந்திடுமே வாழ்வினிலே
பற்றிட உந்தன் பொற்பாதம் அது
பெற்றுத் தந்திடுமே நற்கதியே
அபயத் திருகரத்தினை கண்டதுமே - வாழ்வில்
ஜெயம் வந்து சேர்ந்திடுமே ஜகத் குருவே 
சகாயம் நீர் புரிந்திடுவீர் சற்குருவே - என்
அபயக் குரல் கேட்டு அருள் புரிவீர்

பழி பாவச் செயல்கள்
நான்  பல புரிந்தேன் - உன்
விழி பார்வையால் என்னை வழி நடத்து
சுழி போட்டு உன் பெயரை சொல்லி மகிழ்ந்தேன் - என்
வழி மாற்றி வழி காட்டு உன் வேல் விழியால்

ஹர ஹர சங்கர  ஜெய ஜெய சங்கர
ஜெய ஜெய சங்கர  ஹர ஹர சங்கர
காமாக்ஷி  சங்கர  காமகோடி சங்கர
காமகோடி சங்கர காமாக்ஷி சங்கர

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர். 05.02.2013

"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪