Wednesday, 30 January 2013

தங்கத் தாமரை முகமே ஓம் சாயி - தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.தங்கத்  தாமரை முகமே  ஓம் சாயி
செங்காந்தள்  உன் நிறமே  ஸ்ரீ சாயி
செங்கதிர்  சூரியன் போலே
எங்கும் மங்களம் தருவாயே

தாமரை கண்கள் அதை நீ கொஞ்சம் திறந்தால்
கவலைகள் திவலைகலாகி  பறந்தோடி விடுமே
முத்துப் பற்கள்  தெரிய நீ கொஞ்சம் சிரித்தால்
பத்துப் பதிடைந்து ஜென்மங்கள்  சுகமே
பாபா உன் பார்வையால் என் பாவங்கள் தீர்ப்பாயே

துவாரகா மாயி  வந்து துணி அதனை பார்க்க
ஆறாத மனக் காயம்  காணாது போகுமே
சாவடி சென்று உந்தன் சேவடியில் தலை சாய்த்தால்
போராடி  வாழும் வாழ்க்கை  காற்றாடி ஆகுமே
பாபா உன் பார்வையால் என் பாவங்கள் தீர்ப்பாயே

வேப்ப  மரத்தடி  நீ அமர்ந்து வேதனைகள்  தீர்ப்பாய்
காப்பாய்  என்னை வாழ்வில் நான் சாதனைகள் செய்ய
வேம்பின்  குணம் போல் உன் பார்வை அது ராகங்கள் தீர்க்குமே
அன்பின் மிகுதியால் உன் பேர் சொல்ல சோகங்கள் தீர்ப்பாய்
பாபா உன் பார்வையால் என் பாவங்கள் தீர்ப்பாயே"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

Tuesday, 29 January 2013

மூன்று தேவியர் பாடல் - தேனுபுரீஸ்வர தாசன் இல.சங்கர்

Wrote the following song on 25th Jan. during journey to Horanaadu (from Kolloor)

மூன்று தேவியர் பாடல் - தேனுபுரீஸ்வர தாசன்  இல.சங்கர்
(நீலக்கடலின்  ஓரத்தில் - மெட்டு )

கொல்லூர் மூகாம்பிகை 

மூ  காம்பிகையே  சரணம் அம்மா
மூன்றாம்  பிறை நெற்றி கொண்டவளே
மூன்று தேவியாய்  அருள்பவளே
மூகாசுரனை வதைத்தவளே

குடஜாத்ரி  மலையின்  குமாரியே
படபடக்கும் விழி கொண்டவளே
தடதடவெனவே   ஓடி வந்தேன்
கடந்திட அருள்வாய்  கவலைகளை

சொற்களால் உன்னை பாடிடவே
நற்கதி அருளும் தேவியளே
பற்பல நாமம் சொல்லிடவே
நற்பலன் அருள்வாய் நாளுமே

வானுயர  மரக்  காட்டினிலே
நான் உயர உன்னை நாடி வந்தேன்
செல்வம்  தான் உயர  செய்வாயே
பல உயரம் தொட வைப்பாயே

சங்கு சக்ர தாரினியே
லிங்க ரூபம் கொண்டவளே
தங்க ரேகை ஜோலி ஜொலிக்க
பொங்கும் இன்பம் தருபவளே

மழலை செல்வம் அருள்பவளே
குழந்தைக்கு குரலை அருள்பவளே
பழ வினை போக்கி அருள்பவளே
உனை தொழ வினை தீர்த்திடும் மூகாம்பாசிருங்கேரி சாரதாம்பா

சிருங்கேரியில் உறை சாரதாம்பா
சங்கரர் போற்றிட்ட  சாரதாம்பா
சங்கடம் யாவும்  தீர்ப்பவளே
மங்களம்  வாழ்வில் அருள்வாயே

துங்கா நதி தீர வாசினியே
தங்கும் செல்வம் அருள்பவளே
சிருங்கார ரூப சுந்தரியே
வருங்காலம் வளமாய்  ஆக்குவாயே

சஞ்சல முகத்துடன் வந்தோமே
தஞ்சம் என்றே  சரண் புகுந்தோம்
மஞ்சள் மாலை வெய்யில் போல
நெஞ்சம் மகிழச் செய்வாயே

சாரதா பீடம் சமைதவளே
காரணமாய் வந்து அமர்ந்தவளே
பாரத்தை  இறக்கி வைத்தோமே
ஆரத்தி ஏற்று அருள்வாயே

உன் திரு முகத்தை கண்டதுமே
என் இரு கண்கள் குளமானதே
பண்  திரு பாடல் நானறியேன்
இன்னருள் புரிந்தெனை ஏற்பாயே

வெள்ளிக்  கிழமை மாலையிலே
வெள்ளி நிலவாய் ஜொலிப்பவளே
துள்ளியே குதித்தோம் உனைக்  கண்டு
அள்ளியே அருள்வாய்  ஆசிகளை

பௌர்ணமி நிலவாய் உனை கண்டு
மௌனமாய் நின்றோம்  மதி மயங்கி
மௌனமாய் அருளும் மாதபசி
சௌக்கியம் யாவும் தருபவளேஹொரநாடு  அன்னபூரணி

அன்ன  பூரணி  அருள்வாயே
வண்ண வண்ணமாய் வாழ்வினிலே
எண்ணங்கள் யாவும் சீர்பெறவே
உன்னிடம் ஓடியே வந்தோமே

தங்கப் பதுமையாய் நின்றவளே
பொங்கும் இன்பம் தருபவளே
பொங்கும் உந்தன் பேரருளே
எங்கும் அன்னமாய்  பொங்கிடுமே

ஹொரநாடு  என்னும் தலத்தினிலே
மரங்கள் அடர்ந்த காட்டினிலே
வரங்கள் அருள வந்தவளே
கரம் குவித்துன்னை  தொழுவோமே

இரு கரம் கூப்பி தொழுதிடவே
ஒரு வரம் தருவாய் மகிழ்ந்தே நீ
வருவோர்  வயிறார  பசியாறி
பெறுவார் இன்பம் எந்நாளும்

முற்றிய பக்தியால் உனைப்பாட
பெற்றிடுவோம் பல நன்மைகளே
நற்றமிழால் உனை  நான் பாட
சொற்களை தருவாய் பூரணியே

பெற்றிட உந்தன் தரிசனமே
வற்றி டாதசெல்வம்  வந்திடுமே
உற்ற துணையாய் நீ இருப்பாய்
பெற்ற பிறவியின் பயன் பெறுவோம்

பூஞ்சிட்டு குருவிகள் ஸ்ருதி பாட
குறிஞ்சி பூவாய் மலர்ந்தவளே
செஞ்சுடர்  சொர்ண  தேவியளே
நெஞ்சம் மகிழ்ந்தே அருள்பவளே

எங்கும் உந்தன் திரு நாமம்
ஓங்கி  ஒலிக்கும் ஹொரநாடு
மங்களம் யாவும் அருள்பவளே
வணங்கியே மகிழ்வோம் நாங்களே

கற்றை மரங்கள் சாமரமே
ஒற்றை அருவியின்  ராகங்களும்
சிற்றாறுகளின் சங்கீதம்
பெற்றே மகிழ்ந்திடும்  தேவியே

மூலிகை காற்றின்  வாசங்களே
போலியை நீக்கும் மனதினிலே
சங்கொலியாய் மனம் பக்தியிலே
வலிமை பெற்றே மகிழ்ந்திடுமே

"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

Friday, 18 January 2013

திருமலை திருப்பதி வெங்கடேஸா

சனிக்கிழமை  ஸ்பெஷல்  19. 01. 2013  @ 11.00 am.
(நீலக் கடலின் ஓரத்தில்  - மெட்டு)

திருமலை  திருப்பதி  வெங்கடேஸா
உந்திருநாமம்   அதை  சொல்லிடவே
வரும் துயர்  அனைத்தும்   தீர்ப்பாயே
அருந்துணை   நீயே   அனவரதம்

ஏழு மலை    வாசா   வெங்கடேஸா
ஏழைகளின்   நேசா   வெங்கடேஸா
வாழும்வரை    துணை நீ    வெங்கடேஸா
வாழவைப்பாய்   நீ   வெங்கடேஸா

உன்திரு   மலையை   ஏறி வந்தோம்
உன்முன்    உருகி    வேண்டி நின்றோம்
உன்னத வாழ்வை தருவாயே
உன்னடி  பணிந்தேன்  வெங்கடேஸா

வராஹ தீர்த்தத்தில் நீராடி
வராஹ மூர்த்தியை வணங்கி பின்னே
ஆர்வமாய் வந்தோம் உனைக்கான
பேரருள்  புரிவாய் பெருமாளே

இளகிய மனம் கொண்ட இந்திரன் நீ
வளர் பிறை  போல்   வாழ்   வருள்வாயே
பளபளக்கும்  நெற்றி  திருமண்ணே
வளமானே வாழ்வை தந்திடுமே

பச்சை  கற்பூர   வாசனையில்
இச்சைகள்  தீர்த்து மகிழ்பவனே
உச்ச ஸ்தாயியில்  உன்னை அழைப்போம்
இச்செகத்தில்  வாழ அருள்புரிவாய்

ஆதி அந்தம் அற்றவனே - உன்
பாதாதி கேசம்  காண வந்தோம்
தேவாதி தேவரை காத்தவனே
ஓதியே  மகிழ்வோம் உன் நாமம்

பளபளக்கும்  புன்  னகையுடனே
துளசி மாலை அணிந்தவனே
பல சிக்கல்கள்  தீர்த்தருள்வாய்
பல பெயர் சொல்லி போற்றிடுவோம்

கோவிந்த  நாமம் கேட்டதுமே
கோபால கிருஷ்ணன் நீ  மகிழ்வாயே
கோகுலமாய் வாழ்வு சிறந்திடுமே
கோவிந்தன்  அருளால்  உயர்வோமே

திருப்பங்கள் வாழ்வில் தரும்  வெங்கடேஸா
விருப்பங்கள் நிறைவேற்றும் ஏழு   மலை வாஸா
ஒரு வரம் வேண்டிட வெங்கடேஸா
இரு பங்காய்அருள்வாய் ஏழு   மலை வாஸா"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

Monday, 7 January 2013

மண்ணுலகம் வந்த சிவனே மஹா பெரியவா 08.01.13


மஹாபெரியவா  காஞ்சி மஹாபெரியவா
மண்ணுலகம் வந்த சிவனே மஹா பெரியவா
மஹாபெரியவா  காஞ்சி மஹாபெரியவா
மனக்குறைகள்  தீர்த்து மகிழும்  மஹா பெரியவா

அன்புருவம் கொண்டவரே மஹா பெரியவா
ஆனந்தம் தரும் கோலம் மஹா பெரியவா
இன்முகம் காட்டுபவரே மஹா பெரியவா
ஈசனின் அம்சமே மஹா பெரியவா (மஹா பெரியவா . . .)

உற்சவராய் உலா வந்தார் மஹா பெரியவா
ஊர்தோறும் நடந்தாரே மஹா பெரியவா
என்றும் அவர் புகழ் பாட மஹா பெரியவா
ஏற்றங்கள் அளிப்பாரே மஹா பெரியவா (மஹா பெரியவா. . . )

ஐயங்கள்  களைபவரே மஹா பெரியவா
ஒப்புயர்வு அற்ற மஹான்  மஹா பெரியவா
ஓர் பரப்பிரம்மமே  மஹா பெரியவா
ஔ தத்தம்  நமகென்றும்  மஹா பெரியவா (மஹா பெரியவா. . . )

கண் கொண்டு பார்த்திட்டால் மஹா பெரியவா
காருண்யம் பொங்கிடுமே மஹா பெரியவா
கிட்டிடுமே கைலாயம் மஹா பெரியவா
கீர்த்திகளை பாடி மகிழ்வோம் மஹா பெரியவா (மஹா பெரியவா. . .)

குறையொன்றும்  வாராதே மஹா பெரியவா
கூப்பி உம்மை  கை தொழுதால்  மஹா பெரியவா
கெட்டியாக  பாதம் பற்ற  மஹா பெரியவா
கேட்ட வரம்  அருள்வீரே மஹா பெரியவா (மஹா பெரியவா . . .)

கை தொழுதால்  கை கொடுப்பீர் மஹா பெரியவா
கொட்டும் மேளம் மனதினுள்ளே மஹா பெரியவா
கோடி சந்திர  பிரகாசரே  மஹா பெரியவா
கெளபீன தாரியே  மஹா பெரியவா (மஹா பெரியவா . . .)

with the blessings of mahaperiyavaa....

dhenupureeswaradhaasan.