Monday 25 April 2016

சங்கரானந்தம் 6 : : 22.05.2016

                                       சங்கரானந்தம்  6 


மஹா பெரியவாளின் அருட்கடாட்சத்தினால் 30.12.12 முதல் இன்று வரை இச் சிறியேனுக்கும்  அருள் செய்யும் பொருட்டு என்னை எழுதுகோலாக பயன்படுத்தி மஹா பெரியவாளை போற்றி 500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுத அருள் புரிந்துள்ளார்.   ப்பாடல்களை சங்கரானந்தம் என்னும் தலைப்பில் மஹாஸ்வாமிகளின் பேரருளால் இது நாள் வரை 50000 பிரதிகள் பதித்து இலவசமாக மஹா பெரியவாளின் பக்தர்களுக்கு வழங்கி மகிழும் வாய்ப்பினை அளித்துள்ளார் .

தற்போது மஹாஸ்வாமிகளின்   123வது ஜெயந்தி நாளான வைகாசி அனுஷத்தில் (22.05.2016) 25 பாடல்களை புத்தக வடிவில் 15,000 பிரதிகள் பதித்து இலவசமாக மஹா பெரியவாளின் பக்தர்களுக்கு  வழங்கி மகிழ மஹாஸ்வாமிகளின் பாதார விந்தங்களை பணிந்து ஆசி கோருகிறேன். 

  
மஹா பெரியவாளின் பக்தர்களாகிய தாங்களும் இப்பெரும் புண்ணிய பணியில் ஈடுபட விரும்பினால் குறைந்த பட்சம் தலா ரூ.108 அனுப்பினால் கூட போதும்.      இந்த தொகுப்பை   தபாலில் சேர்ப்பிக்கிறேன். அதிக அளவில் அச்சு விலையில் புத்தகங்களை பெற்று தங்களது வட்டத்தில் நடைபெறும் இறை வழிபாடுகளில் , திருமணம் , உபநயனம் , சஷ்டியப்த பூர்த்தி போன்ற விசேஷ நாட்களில் விநியோகிக்க விரும்பும் அன்பர்களும் அணுகவும்.

ரூ. 1000 ற்கு மேல்   நன்கொடைகள்  வழங்கி 

தங்கள்  பெயர்களை ப்புத்தகத்தில் 

இடம் பெறவும் செய்யலாம். 




BANK ACCOUNT DETAILS :





S. THANUJA
INDIAN BANK
RAJAKILPAKKAM CHENNAI - 73.
A/C. NO. 792752550
IFSC Code: IDIB000R053



L. SHANKAR
STATE BANK OF INDIA
TAMBARAM BRANCH , CHENNAI 45.

A/C NO. 10565278389
IFSC Code: SBIN0001243

For those who wish to contribute to SHANKARAANANDHAM book to be released on May 22nd., 2016
pls contact :

L. SHANKAR   99404 47 437 ,  98847 18 324
( 8  to  10 pm.  only  please) 

104 ARAVIND NAGAR , MADAMBAKKAM, CHENNAI - 126.

For Higher amounts,  Cheque may also be given in the name of 
M/s.Frontline Printers , Guindy.

Those who pay in bank, 
Please send your address (for sending book) to  madambakkamshanks@yahoo.com or whatsapp your address to 99404 47 437.

Wednesday 13 April 2016

ஆதிரை நாதனுக்கோர் ஆனந்த கானம்

ஆதிரை நாதனுக்கோர் ஆனந்த கானம்
(தெலிசிதே மோட்சமு - மெட்டு)
ஆதி முதல் நாதனே ஆனந்த கூத்தனே
ஆதிரை நாதனே ஆதரித் தருள்பவனே
ஆதி சிவ ஜோதியே ஆதி பரஞ்ஜோதியே
ஆதி மூல நாதனே அனாதி கால ஈசனே
ஆதி அந்தம் இல்லாத அத்வைத ஜோதியே
ஆதி காக்கும் கடவுளே ஆனந்த தாண்டவனே
ஆதி குரு நாதனே அருட் சிவ நாதனே
ஆதி சிவ பரம்பொருளே அரு உரு நாதனே
ஆதி க்ஷேத்திர வாஸனே கைலாய ஈசனே
ஆதியோடந்தம் அருள் ஆகாய தலத்தோனே
ஆதி முதற் பரம் பொருளே ஆதி ஞான கருப் பொருளே
ஆதி சுடர் முகத்தோனே ஓர் ஆறு முகத்தோனே
ஆதி கடவூர் உறை கால கால ஈசனே
ஆதி நடன நாதனே ஆனந்தம் அருள்பவனே
-தேனுபுரீஸ்வர தாசன் இல. சங்கர் 13.04.2016
திருவாதிரை தினத்தன்று (13.04.2016)
ஆதிரையானின் அருளால் எழுதியது.
Listen to a song for mahaperiyava in similar rhythm(thelisithe motchamu mettu). in the following link...