Friday 25 October 2013

ஜெயம் ஜெயம் ஜெயம்தரும் நரசிம்மா 25.10.2013

ஜெயம் ஜெயம் ஜெயம்தரும் நரசிம்மா
ஜெபித்திட உன் நாமம் நரசிம்மா
அபயம் வேண்டிட நரசிம்மா
சமயத்தில் காப்பாயே நரசிம்மா
நரசிம்மா உக்ர நரசிம்மா
நரசிம்மா லக்ஷ்மி நரசிம்மா

பிரஹலாதன் அழைத்திட நரசிம்மா
வரம் தர வந்தவா நரசிம்மா
கரம் கூப்பி கதறிட நரசிம்மா
மறுக்காமல் காப்பாயே நரசிம்மா (ஜெயம்)

சிங்கமுகம் கொண்டவா நரசிம்மா
சங்கடம் தீர்ப்பவா நரசிம்மா
ஏங்குவோர்க்கு அருள்வாயே நரசிம்மா
தங்கு தடை இன்றியே  நரசிம்மா (ஜெயம்)

சோளிங்கர் தலத்திலே  நரசிம்மா
பொலிவோடு அமர்ந்தாய் நரசிம்மா
கிலியோடு வருவோர்க்கு நரசிம்மா
வலி போக்கி அருள்வாயே நரசிம்மா
 
பூவரசங் குப்பத்திலே நரசிம்மா
பூப்போல சிரித்திடும் நரசிம்மா
பூவாக மடியிலே நரசிம்மா
பூ மகளை அமர்திட்டாய் நரசிம்மா

சிங்கிரி  தலத்திலே நரசிம்மா
ச(ம்)ங்கார கோலத்திலே நரசிம்மா
சிங்காரமாய் அமர்ந்திட்ட  நரசிம்மா
சங்கடம் தீர்த்திடும் நரசிம்மா

பரிக்கல் தலத்திலே நரசிம்மா
தரிசிக்க உன்னை நரசிம்மா
பரிசாக அளிப்பாய் நரசிம்மா
கரிசனப் பார்வையே நரசிம்மா

நாமக்கல் தலத்திலே நரசிம்மா
க்ஷேமங்கள் அருளும் நரசிம்மா
நாமங்கள் சொல்லிட நரசிம்மா
மங்களம் அருள்வாய் நரசிம்மா

கட்ட வாக்கத்தில் நரசிம்மா
வான்முட்ட அமர்ந்தாயே நரசிம்மா
கிட்டிட உன் அருள்  நரசிம்மா
கொட்டிடும் செல்வமே நரசிம்மா

நங்க நல்லூரில் நரசிம்மா
பொங்கியே சிரிக்கும் நரசிம்மா
ஏங்கியே வணங்கிட நரசிம்மா
தாங்கியே துயர்தீர்ப்பாய் நரசிம்மா

அந்திலி தலத்திலே நரசிம்மா
சுந்தரமாய் அமர்ந்த நரசிம்மா
வந்திட உன்னிடம் நரசிம்மா
தந்திடுவாய் வரம் நரசிம்மா


பழைய சீவரத்தில் நரசிம்மா
பாலாற்றின் கரையில் நரசிம்மா
பழவினை போக்கிட நரசிம்மா
பாங்காய் அமர்ந்திட்ட நரசிம்மா

பாட லாத்திரி தலத்திலே நரசிம்மா
தேடி குகை  அமர்ந்தாயே நரசிம்மா
நாடி வருவோர்க்கென்றும் நரசிம்மா
நாடியதை நல்கிடும் நரசிம்மா
-தேனுபுரீஸ்வர தாசன் இல.சங்கர்.
25.10.2013

No comments:

Post a Comment