Friday 27 December 2013

நிர்மலம் உந்தன் நிழலுமே



நிர்மலம் உந்தன் நிழலுமே (கண்)
நீர்மல்க வருவோர்க்கு கார்மேகமே (நிர்மலம்)

நிற்கதியாய் நிற்போர் நீரே கதியென்று
நிற்க உம முன்னே நீரே அருள்வீர்
நற்கதி பெற்றிட நமசி வாயனாக
நல்லாசி தந்தே நல்வாழ்வு தருவீர்

நாடியே வருவோரின் நோய்நொடி அறிந்தே
நாடியதைத் தந்திடுவீர் நாட்டமாக
நாடி வந்தோர் உம்மை நமசி வாயனாக
நாடி துடிப்போடு நமஸ்கரிப்பார்

நால் வேதம் தழைத்திட நடந்தீர் நீரே
நானிலமும் நடந்தீரே நடராஜனாக
நான் மறை போற்றும் நமசிவாயனாய்
நான் மறைந்திடவே அருள்வீர் நலன்களே

No comments:

Post a Comment