Wednesday 13 April 2016

ஆதிரை நாதனுக்கோர் ஆனந்த கானம்

ஆதிரை நாதனுக்கோர் ஆனந்த கானம்
(தெலிசிதே மோட்சமு - மெட்டு)
ஆதி முதல் நாதனே ஆனந்த கூத்தனே
ஆதிரை நாதனே ஆதரித் தருள்பவனே
ஆதி சிவ ஜோதியே ஆதி பரஞ்ஜோதியே
ஆதி மூல நாதனே அனாதி கால ஈசனே
ஆதி அந்தம் இல்லாத அத்வைத ஜோதியே
ஆதி காக்கும் கடவுளே ஆனந்த தாண்டவனே
ஆதி குரு நாதனே அருட் சிவ நாதனே
ஆதி சிவ பரம்பொருளே அரு உரு நாதனே
ஆதி க்ஷேத்திர வாஸனே கைலாய ஈசனே
ஆதியோடந்தம் அருள் ஆகாய தலத்தோனே
ஆதி முதற் பரம் பொருளே ஆதி ஞான கருப் பொருளே
ஆதி சுடர் முகத்தோனே ஓர் ஆறு முகத்தோனே
ஆதி கடவூர் உறை கால கால ஈசனே
ஆதி நடன நாதனே ஆனந்தம் அருள்பவனே
-தேனுபுரீஸ்வர தாசன் இல. சங்கர் 13.04.2016
திருவாதிரை தினத்தன்று (13.04.2016)
ஆதிரையானின் அருளால் எழுதியது.
Listen to a song for mahaperiyava in similar rhythm(thelisithe motchamu mettu). in the following link...

No comments:

Post a Comment