Thursday 11 April 2013

ஓரிக்கை நோக்கி கை கூப்புவோம் 09.04.2013

ஓரிக்கை நோக்கி கை கூப்புவோம் 
(சரவணப்  பொய்கையில்  நீராடி - மெட்டு )
ஓரிக்கை  தலம்  வர சீராகுமே - வாழ்வில் 
பேரின்பம் பெற்றே மகிழ்வோமே 
பேரிடர் வாழ்க்கை பொசுங்கிடுமே  - வேரில் 
நீரிட்ட செடியாய் மலர்வோமே 
 
ஓரிக்கை தலத்தின் மஹா ஸ்வாமியே  - நம் 
கோரிக்கை யாவும் நிறைவேற்றுவார் 
பேரிகை  முழங்கிடும் மனதினிலே - ஸ்வாமியின் 
விரி கையை  கண்டதும் விடிந்திடுமே 
 
 
நீரிடை தாமரையாய் அவர் வாழ்ந்தார்  - நம்மை 
பரிசிலாய்  கரை சேர்ப்பார்  வாழ்வினிலே 
விரிசடை சிவனாய்  உலா வந்தார் - அவர் 
பாரிடை பலமுறை நடந்தாரே 
 
விரிகடல் போன்ற நம்  துயர் தீர்க்க - நாளும் 
இவரின் பாதத்தை போற்றிடுவோமே 
பரிதவித்தே  வாழ்வில் துவண்டு போனோர் - இவர் 
சிரிப்பினை கண்டதும் சிலிர்தெழுவார் 
 
சரிவினை வாழ்வில் சந்தித்தோரை - இவர் 
பரிவுடன் ஏணியாய்  ஏற்றிடுவாரே
எரிமலை  போல் வாழ்வில்  துயர் அடைந்தோர்  - இவர் 
தரிசனம் பெற்றிட தழைப்பாரே 
 
ஓரிக்கை தலமே  வந்திடவே - நம் 
தரித்திரம் நீங்கியே தனம் பெறுவோம் 
கோரி  கை  கூப்பிடவே  மஹா  ஸ்வாமி 
ஓரிரு கை  தூக்கியே வாழ்த்திடுவார் 
 
 
காரிருள் வாழ்வில் கலந்குவோர் வாரீர்  - நம் 
ஓரிக்கை தருமே ஒளி வாழ்வே 
நேரிடும் துன்பங்கள்  நீங்கிடுமே  - நாம் 
போரிட்ட வாழ்வே பொன்னாகுமே 
 
 
மாரியாய்  அருள்மழை  பொழிவாரே - நம் 
ஓரிக்கையில் காஞ்சியின்  மஹா ஸ்வாமியே 
சீரிய வாழ்வை சீக்கிரம் அருள்வார் - அவர் 
உயரிய எண்ணங்கள் கொண்டோர்க்கு 
 
நரிபோல் சூதோடு  பரி போல் ஓடி  - நம் 
கரியான வாழ்வை மாற்றிடுவோம் 
சரியான பாதையில்  செல்வோமே - நாம் 
ஓரிக்கை தலத்தை  வணங்கிடவே 
 
-தேனுபுரீஸ்வரதாசன்  இல.சங்கர் 
09.04.2013

No comments:

Post a Comment