Friday 24 May 2013

காஞ்சி மாமுனிக்கோர் அனுஷ கானம்

காஞ்சி மாமுனிக்கோர் அனுஷ கானம்
(பிரம்ம முராரி  - மெட்டு )

அனுஷத்தில்  பிறந்திட்ட காஞ்சி மாமுனியே
நிமிஷத்தில் அருள்வார் நித்திய இன்பம்
வருஷத்தில் பன்னிரெண்டு அனுஷத்தில் வணங்கிட
கிரக தோஷம் போக்கி சந்தோஷம் அளிப்பார்

ஜெகம்காக்க  வந்திட்ட ஜெகத்குரு  அவரின்
முகம் பார்க்க  மலர்வோம் முன்வினை தீர்ந்து
யுகம் யுகமாக காத்திடும் அவரை
அகம் தனில் நினைத்து  அர்ச்சிப்போமே

ஈசனின் அம்சமாய்  காசிக்கும் நடந்தார்
தேசங்கள் காத்திட நேசமாய் நடந்தார்
பாசமாய் மக்களை பாரினில் வென்றார்
தாசனாய் மாறிட தயை புரிவாரே

நம்பி  கை கூப்பிட    நம்பிக்கை  அளிப்பார்
தும்பிக்கை பலத்தை   தூக்கி கை அளிப்பார்
வெம்பி வாடி வதங்கியே  சென்றோர்
தும்பிபோல்  திளிர்த்து துள்ளியே திரும்புவர்

வேதத்தை  வளர்த்திட பாதத்தால் நடந்தார்
கீதங்கள் பாடிட ஊக்கங்கள் தந்தார்
ஓர்திங்கள்  ஓரிடம் என்றே பறந்தார்
நேர்த்தியாய்  வாழ்ந்திட  நடந்தே காட்டினார்

கருவறை சிவனார் உருக்கொண்டு வந்தார்
தெருவெங்கும் நடந்தார் தெய்வீக சிலையாய்
வருவோர் குறை தீர்த்து வளர்ந்திடச்  செய்தார்
குருவாய் வருவார் இருட்டிலும் துணையாய்

திருக்கோயில் வழிபாடு திருந்திடச் செய்தார்
ஒருகோயில் ஊருக்குள் சிறந்திட செய்தார்
கற்கோயில் பலவற்றை திருப்பணி செய்தார்
நற்கோயில் நாடி நம் மனம் புகுந்தார்

மனதினுள் மஹா ஸ்வாமி  உள்ளார் என்றே
நினைத்தே  நாளும் நடந்திடு வோமே
தினையளவேனும்  அவர் வழி நடக்க
நினைத்திட உயர்வோம் வாழ்வில் தானே

இருட்டை விலக்கும் கை விளக்காக
அருட்குரு  அவரின் பாதையில் செல்வோம்
பொருட் செலவின்றி பொக்கிஷம் பெறுவோம்
அருட்காட்சி கிடைத்து ஆனந்த மடைவோம்
          -தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்


Planning to go to Mahaperiyavaa's adhishtaanam every month alongwith the darshan of atleast 10 puraadhana shiva temples of Thondai Naadu(approx. 180 temples to be covered)

Pls grab this opportunity to see all the shiva temples with GURU's blessings....

For more dtls cont @ 98847 18 324.





No comments:

Post a Comment