Friday 18 January 2013

திருமலை திருப்பதி வெங்கடேஸா

சனிக்கிழமை  ஸ்பெஷல்  19. 01. 2013  @ 11.00 am.
(நீலக் கடலின் ஓரத்தில்  - மெட்டு)

திருமலை  திருப்பதி  வெங்கடேஸா
உந்திருநாமம்   அதை  சொல்லிடவே
வரும் துயர்  அனைத்தும்   தீர்ப்பாயே
அருந்துணை   நீயே   அனவரதம்

ஏழு மலை    வாசா   வெங்கடேஸா
ஏழைகளின்   நேசா   வெங்கடேஸா
வாழும்வரை    துணை நீ    வெங்கடேஸா
வாழவைப்பாய்   நீ   வெங்கடேஸா

உன்திரு   மலையை   ஏறி வந்தோம்
உன்முன்    உருகி    வேண்டி நின்றோம்
உன்னத வாழ்வை தருவாயே
உன்னடி  பணிந்தேன்  வெங்கடேஸா

வராஹ தீர்த்தத்தில் நீராடி
வராஹ மூர்த்தியை வணங்கி பின்னே
ஆர்வமாய் வந்தோம் உனைக்கான
பேரருள்  புரிவாய் பெருமாளே

இளகிய மனம் கொண்ட இந்திரன் நீ
வளர் பிறை  போல்   வாழ்   வருள்வாயே
பளபளக்கும்  நெற்றி  திருமண்ணே
வளமானே வாழ்வை தந்திடுமே

பச்சை  கற்பூர   வாசனையில்
இச்சைகள்  தீர்த்து மகிழ்பவனே
உச்ச ஸ்தாயியில்  உன்னை அழைப்போம்
இச்செகத்தில்  வாழ அருள்புரிவாய்

ஆதி அந்தம் அற்றவனே - உன்
பாதாதி கேசம்  காண வந்தோம்
தேவாதி தேவரை காத்தவனே
ஓதியே  மகிழ்வோம் உன் நாமம்

பளபளக்கும்  புன்  னகையுடனே
துளசி மாலை அணிந்தவனே
பல சிக்கல்கள்  தீர்த்தருள்வாய்
பல பெயர் சொல்லி போற்றிடுவோம்

கோவிந்த  நாமம் கேட்டதுமே
கோபால கிருஷ்ணன் நீ  மகிழ்வாயே
கோகுலமாய் வாழ்வு சிறந்திடுமே
கோவிந்தன்  அருளால்  உயர்வோமே

திருப்பங்கள் வாழ்வில் தரும்  வெங்கடேஸா
விருப்பங்கள் நிறைவேற்றும் ஏழு   மலை வாஸா
ஒரு வரம் வேண்டிட வெங்கடேஸா
இரு பங்காய்அருள்வாய் ஏழு   மலை வாஸா



"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

No comments:

Post a Comment