Friday 1 March 2013

ஓங்கார ரூபன் கணபதியே

வினைகள் தீர்க்கும் விநாயகன் அருளால் 
சங்கட ஹர  சதுர்த்தி நேரத்தில் இன்று (1.3.13 )எழுதியது :
(ஓம் பூர் புவஸ்சுவஹ  அல்லது 
செந்தமிழ் நாடெனும் போதினிலே மேட்டில் பாடவும்)

ஓமெனும் மந்திர  உட்பொருளே
ஓங்கார ரூபன் கணபதியே
ஓர் முறை வளம் வர  மகிழ்வானே
ஓர் குறை  இன்றி அருள்வானே

ஓர் கொம்பை   கொண்ட கணபதியே
ஓர் முறை    கும்பிட மகிழ்வானே
ஓர் தும்பை  பூவால்  அர்ச்சிக்க
ஓர் துணை   யாய் என்றும்  இருப்பானே

ஒற்றை தும்பிக்கை கணபதியே
பற்றிட  மகிழ்வான்   அவன் பாதம்
நெற்றியில் குட்டியே வழிபடவே
வெற்றியை தருவான் விநாயகனே

குளக்கரை ஓரம் அமர்ந்தவனே
விளங்கிடுவான் நம் துணையாக
கலங்கரை விளக்காய்  கரை சேர்ப்பான்
கலங்கிடும் பக்தரை கணபதியே

ஐந்து கரங்கள் கொண்டவனே
வந்து வரங்களை அருள்வானே
முந்தி அவனை வழிபடவே
முந்தியே அருள்வான் கணபதியே

ஆனை   முகம் கொண்ட  கணபதியே
பானை வயிறு  படைத்தவனே
எண்ணெய்  விளக்கேற்றி வழிபடவே
முன்னை வினைகள் தீர்ப்பானே

முறம் போன்ற    காதை  கொண்டவனே
முறையிட  கேட்பான் குறைகளையே
கரம் குவித்தவனை வழிபடவே
வரம் தந்து    மகிழ்வான்   விநாயகனே

கையில்  மோதகம்  கொண்டவனே
வாழ்க்கையை  இனிக்கச்  செய்வானே
நம்பி கை  கூப்பிட மகிழ்வானே
நம்பிக்கை  வாழ்வில் அருள்வானே

அங்குசம் கையில் கொண்டவனே
சங்கடம் தீர்ப்பான் சதுர்த்தியிலே
பொங்கும் இன்பம் அருள்வானே
தங்கும் செல்வம் தருவானே

No comments:

Post a Comment