Monday 18 February 2013

உனைப் பார்த்து மகிழ்வோமே மாமுனியே

உனைப் பார்த்து மகிழ்வோமே மாமுனியே
(உனைப் பாடும் தொழிலன்றி வேறு  இல்லை - மெட்டு )

உனைத்  தேடி வந்தேனே காஞ்சியிலே
எனைக் காத்து அருளுவாயே   மாமுனியே
உனைக் காண உயர்வோமே வாழ்வினிலே
உனைப் பார்த்து மகிழ்வோமே மாமுனியே
பெரியவா  மஹா பெரியவா

காஞ்சியில்  அமர்ந்திட்ட காலடி சங்கரா  - நீ
வாஞ்சையுடன்  அருள்புரியும்  காமாக்ஷி  சங்கரா
செஞ்சுடர்  முகம் அதனில் புன்சிரிப்பே என்றும்
அஞ்சிடும் பக்தருக்கு  ஆர்ப்பரிப்பே

நெஞ்சம்முழுதும்   சஞ்சலம் கொண்டு தவித்தேனே - நீ
பஞ்சாய்  அவற்றை பறக்கச்  செய்வாயே
தஞ்சம் அடைந்திட்ட  பக்தருக் கருளும் தயாபரனே - நீ
மஞ்சள் மாலை வெய்யிலாய்  அருளும் மகேஸ்வரனே

அஞ்ஞான  இருளை நீக்க வந்த ஆதவனே - நீ
விஞ்ஞானத்தால் மெய்ஞானம் வளர்த்த வேதியனே
நஞ்சை உண்ட நீலகண்டனாய்  காப்பவனே - நீ
பஞ்சை போல் இப்பூவுலகில் வாழ்ந்து காட்டியவா

மஞ்சத்தை  தவிர்த்து காஞ்சியில் அமர்ந்த குருபரனே - எங்கள்
நெஞ்சத்தை கொள்ளை கொண்ட நஞ்சுண்ட கண்டனே
செஞ்சுடர் வண்ண காவி உடுத்திய  செந்தாமரையே  - நீ
வெஞ்சுடர் நெற்றியில் வெண்ணீறு பூசிய வெள்ளி நிலவே

பிஞ்சு மனத்தால்  பிதற்றிட உடன் அருள் புரிபவனே - உன்
அஞ்சு விரலால் அஞ்சும் நெஞ்சிற்கு அபயம் அளிப்பவனே
பஞ்சு திரியாய்  வாழ்ந்து பகலில் ஒளி தந்தவா  - உன்
பிஞ்சு நெஞ்சம் சொன்னதை பஞ்சாய் பற்றிட முயல்வோமே

                                - தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர். 18.02.2013


"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

No comments:

Post a Comment