Tuesday 12 February 2013

ஜெய் சாயி நாதா ஜெகத்குரு நாதா 09.02.13

(பிரம்ம முராரி - மெட்டு)

ஓம் சாயி   நாதா   ஸ்ரீ  சாயி    நாதா
வந்தேன் உந்தன் பூப்பாதம்  காண
ஜெய் சாயி   நாதா   ஜெகத்குரு   நாதா
ஜெயமே தருவாய் வாழ்வில் என்றும்

துவாரக மாயியில்  அமர்ந் தருள்பவனே
கவலைகள் யாவும் தீர்த் தருள்வாயே
துணியின் வெம்மையை  உணர்ந்திட்ட  உடனே
மனமது  குளிர்ந்திடும்  சாயி   உன் அருளால்

இரு காலை   மடக்கி நீ    அமர்ந்திட்ட   கோலம்
வருவோர்  துயர் தீர்க்கும்   நாளும் நாளும்
இரு  கண்கள்    போதாதே   உன் உரு    காண
இரு கரம்   கூப்பி  தொழுதேன்   நானே

சர்வமும் நீயே சத்குரு சாயி
கர்வத்தை  அழிப்பாய்   உன் காந்தக்    கண்ணால்
ஆர்வம் மேலிட அழைத்திட உன்னை
ஓர்வரம்   அளிப்பாய்  ஒப்பற்ற சாயி

அறுபது    ஆண்டுகள் நீ    அமர்ந்திட்ட    இடமே
அறுத்திடும் ஆயிரம் ஜென்மத்தின்  பாவத்தை
சிறு மனம்   கொண்ட என்    சிக்கல்கள்   தீர்த்து
மறு பிறப்பின்றி  அருள்வாய் சாயி

பசித்தவர் புசித்திட  ருசியுடன் சமைத்தாய்
கசிந்திட கண்ணீர் பொறுப்பாயோ  நீயே
யாசித்திட்ட  யாவர்க்கும் யோசிக்காமல்  அருளினாய்
மாசில்லாத மனம் கொண்ட மஹேஸ்வரன் நீயே

கால் விரல்     இடையில்  கங்கையை வரவைத்தாய்
பால் போல்  மனத்தால் பலருக்கும்   அருள் செய்தாய்
கால் மடித்தமர்ந்த   காருண்ய   ரூபனே
மால் அயன்     போற்றிடும்    மஹேஸ்வரன்     நீயே

வந்தவர்க்   கெல்லாம் வரங்கள் தந்தாய்
நொந்திட்ட  மனதிற்கு  சந்தனம் பூசினாய்
செந்தனல் சாம்பலால் நோய்கள்  தீர்த்தாய்
இந்து முஸ்லீம்    இடையினில்   பாலம்    அமைத்தாய்

ஸ்ரீ ராம   நவமியை  மசூதியில் செய்தாய்
சந்தன கூட்டை இந்துவாய் செய்தாய்
செந் தூரம் பூசி ஹனுமனை வைத்தாய்
வந்தோரை  காத்திடும் வைகுண்ட வாசனே

-தேனுபுரீஸ்வர தாசன் இல .  சங்கர்  09.02.2013

"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

No comments:

Post a Comment