Friday 30 August 2013

கிருஷ்ண ஜெயந்தி பாடல் 28.08.2013

கிருஷ்ண ஜெயந்தி  பாடல் by  தேனுபுரீஸ்வர தாசன் இல. சங்கர்.

விட்டல போலோ    விட்டல போலோ    போலோ  விட்டலா
விட்டல போலோ    விட்டல போலோ    போலோ  விட்டலா
விட்டல போலோ    விட்டல போலோ    போலோ  விட்டலா
விட்டல போலோ    விட்டல போலோ    போலோ  விட்டலா

 
ஆலிலை கிருஷ்ணா   நூலிடை சேலை  தந்தாய் நீ அன்று
பால லீலைகள்  புரிந்தாய் நீயே    பால் தயிர்   திருடி தின்று
பாலகிருஷ்ணனாய்   பசுக்களை  காக்க    தூக்கினாய் நீ குன்று
கோல விழியால் கோகுலத்தோரை காத்தாய்  நீ நின்று

உடுப்பியில் நின்றாய்   கையில் மத்தோடு   பால கிருஷ்ணனே
இடுப்பில் கை வைத்து    நின்றாய் நீயே   பண்டரி புரத்தினிலே
மிடுக்காய் நீயே   தேரை ஒட்டினாய்    பஞ்ச பாண்டவர்க்கு
தடுப்பாய்  துயரை   தவறாதுன்னை அஞ்சியே அடைந்வோர்க்கு

குழந்தை வரமே  தந்திட நீயே தொட்ட மல்லூரில்
தவழ்ந்தே வந்தாய் வெண்ணையோடு நவநீத கிருஷ்ணனே
முழம் முழமாக சேலைகள் தந்தாய் முனகிட உன் பெயரை
ஆழம் பார்த்து அருள்வாய் நீயே அனந்த கிருஷ்ணனே

பக்தியோடுன்னை  அணுகிட அருள்வாய் பாலகிருஷ்ணனே
பக்தை  ராதையின்  பக்திக்கு இறங்கிய  ராதா கிருஷ்ணனே
பக்தி மார்க்கத்தை பரப்பிட வந்தாய் பார்த்த சாரதியாய்
பக்தி மார்க்கத்தை வளர்த்திட தந்தாய் பகவத் கீதையையே

பக்தனுக்காக வாசலில் நின்றாய் ஹே பாண்டு ரங்கா
பக்தனுக்கென்றும் அருள்வாய் நீயே ஹரே பாண்டு ரங்கா
பக்தாநுக்ரஹ ப்ரியனே  பிரபோ பாண்டு ரங்கா
பக்தரை என்றும் காத்திடுவாயே  ஹரே  பாண்டு ரங்கா

விட்டல விட்டல பாண்டு ரங்கா   பண்டரி நாதா
விட்டல விட்டல பாண்டு ரங்கா   பண்டரி நாதா
விட்டல விட்டல ரகுமாயி விட்டல பண்டரி புர  வாசா
விட்டல விட்டல ரகுமாயி விட்டல பண்டரி புர  வாசா


பாண்டுரங்கனுக்கோர் பைந்தமிழ் பாடல் by தேனுபுரீஸ்வர தாசன்
(பிருந்தாவனமும் நந்தகுமாரனும் - மெட்டு )

பாண்டு  ரங்கா    பாண்டு  ரங்கா
பண்டரிபுரத்தின்  பாண்டுரங்கா
வேண்டும் வரங்களை  தந்திடுவோனே
என்றும் உன்னை மறவோமே 

சந்திர பாகா நதியின் கரையில்
சுந்தரமாக  நின்றவனே
வந்திட உந்தன் சன்னதி உடனே
தந்திடு  வாய் நல் வரங் களையே

புண்ட  லீகனை காண வந்து
காத்திருந்தீரே வாசலிலே
வந்திட்ட அந்தணர் வரம்தரும் விஷ்ணு
என்றறியாமலே நிற்க வைத்தான்

செங்கல்லின் மேல்  நிற்கும் பாண்டுரங்கா
எங்கள் மனக்குறை தீர்ப்பாயே
பங்கஜ விழியால் பார்த்தே நீயே
நீங்கா கவலைகள் மறக்கச்செய்வாய்

வந்து  உன் பாதத்தில்  தலைவைத்து வணங்க
வந்திடும் வாழ்வில் வசந்தங்களே
நொந்து உன் பாதத்தில் விம்மி கதறிட
தந்திடுவாயே சுகங்களையே

இடுப்பில்  கை வைத்து   இன்முகத்  துடனே
மிடுக்காக நிற்கும் மாதவனே
தடுப்பாயே  நீயே நான் படும் துயரை
செவி மடுப்பாய்  எங்கள் கேசவனே 

மகர குண்டலம் அணிந்தே  இந்த
ஜெகம் காக்கும் எங்கள் ஜெகன்னாதா
அகமே குளிர கண்டோம் உன்னை
சுகமே அளிப்பாய் சுந்தரனே

ருக்மணி சமேத பாண்டு ரங்கா
எக்கணமும்  துணை நீர்தானே
சிக்கல்கள் இன்றி சுகமாய் வாழ்ந்திட
சுக்ருதம் அளிப்பீர் வாழ்வினிலே

விட்டல விட்டல என்றே கைகள்
தட்டியே பாடுவோம் உன்முன்னே
விட்டல விட்டல என்றே பாடிட
கிட்டிடும் வாழ்வில்  நிம்மதியே

விட்டல விட்டல பாண்டு   ரங்கா
விட்டல விட்டல பாண்டுரங்கா
விட்டல  விட்டல  பண்டரி  நாதா
மட்டில்லா மகிழ்ச்சியை தருவாயே 



No comments:

Post a Comment