Monday 5 November 2012

அதிகாலை சூரியன் அன்னையே 05.11.2012



மலர் போன்ற சிரிப்புந்தன் முகமே
பலர் வந்து கை தொழுவர் தினமே
புலர்கின்ற பொழுதுந்தன் அருளால்
மலர்ந்திட வேண்டும் நல் மலர் போல்
கரம் குவித்தால் அன்னையே - மன
பாரம் குறைக்கும் அன்னையே . . .

உள்நாடு வெளிநாடு எந்நாட்டிற்கும் என்றும் நீ சொந்தம்
அன்போடு பண்போடு நாடுவோர்க்கு என்றும் நீ பந்தம்
மலரோடு மனதோடு உன்னை வந்து பார்த்திட்டால் இன்பம்
காதோடு குறைபாடு சொன்னால் பறந்திடும் என் துன்பம்
அதிகாலை சூரியன் அன்னையே - உன்
பால் வடியும் கருணை முகம் அதுவே

ஏழைக்கும் கொழிக்கும் தைரியம் நீ தந்தாய்
தாழாத கீர்த்தியை அனைவர்க்கும் தந்தாய்
பாழான வாழ்வென்று வந்தோரை கடிந்தாய்
வாழ்வாங்கு வாழ்ந்திட அருளே நீ தந்தாய்
வண்ண மலர் அன்னையே
கண் இமைக்கும் உன் பூ முகமே



பூப்போல  பூப்போல சிரிப்பாயே
பால் போல  பால் போல மொழிவாயே நீயே
கால் போன போக்கில் நான் சென்றால்
வேல் போன்ற உன் விழியால் காப்பாயே

பூக்களால் பூஜித்தோம் உன்னை
பாக்களால் பாடினோம் உன்னை
காத்திடுவாய்  நீ என்றும் என்னை
அன்பால் நீ அனைவர்க்கும் அன்னை



வளர் திங்கள் போல் வாழ்வு வளர்ந்திட வேண்டும்
பலர் போற்றி பாராட்ட உயர்ந்திட வேண்டும்
மலர் போல தினம் நானே சிரித்திட வேண்டும்
தளிர் போல் மனம் நீயே கொடுத்திட வேண்டும்

அன்போடு பண்போடு பழகிட  நாங்கள்
புகழோடு பெயரோடு வாழ்வோமே என்றும்
கண்பார்வை ஒன்றால் கரை சேர்த்தாயே தாயே
என் உள்ளம் என்றும் உன்னை போற்றிடும் அன்னையே


rendu varusham pondyla (kuppai kottinadhukku !!!)  irundhadhukku
justify pandra maathiri edho ennaala mudinjadhu ANNAIyai patri konjam ezhudhi vitten.

THANKS A  LOT  MOTHER. . . !!!

No comments:

Post a Comment