Monday 26 November 2012

அருணாச்சல தரிசன கானம்

அருணாச்சல தரிசன கானம்

அருணையில் உறையும் கருணைக் கடலே
உருகியே வழிபட்டேன் உனையே ஐயா
முருகனின் தந்தையே முக்கண்ண முதல்வனே
வருவாய்  அருள்வாய் அருணாசலனே


கரம் குவித்துனையே  பார்த்திட உடனே
பரவசம் அடைந்தேன் அருணாசலனே
சிரம் தாழ்த்தி உன்னை வணங்கிய உடனே
பரசிவ சுகம் அதை உணர்ந்தேன் சிவனே


உன் திரு மலையை கண்ட உடனே
கண்பெற்ற பலனை அடைந்தேன் நானே
எண்ணங்கள் இன்றி வெண் திரையானேன்
விண் நோக்கி பறந்தேன் அருணாசலனே


பாரினில் உண்டோ உனக்கோர் ஈடு
வேறிடம் புகலே எனக்கேது கூறு
யாரிடம் சொல்வேன் உன்னை அன்றி சிவனே
ஓரிடம் தருவாய் அருணாசலனே


எத்தனை பிறப்புகள் எத்தனை இறப்புகள்
எத்தனை பிறப்பே நான் பிறப்பேனோ 
அத்தனை பிறப்பிலும் உனை மறவாதிருக்க
வழி துணை நீயே அருணா சலனே



"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

No comments:

Post a Comment