Saturday 20 October 2012

பாண்டு ரங்கனை சேவிப்போம் 20.10.12




பாண்டு ரங்கனை சேவிப்போம்
நம் கவலைகள் தீர்ந்து
வேண்டும் வரங்களை பெறுவோமே
சந்திர பாகா நதிக்கரையினிலே
சுந்தரமாக நின்றவன் அவனே
தென்னாங்கூர் தலம் வந்து நிற்கும் ( பாண்டு . . . )
புண்டலீகன் காண வந்தான் அன்று
ஹரிதாஸ் கிரி காண வந்தான் இன்று
ஹரி அவன் கருணையை என்னென்று சொல்ல ( பாண்டு . . . )
செங்கல்லின் மேல் நிற்கும் பாண்டு ரங்கன்
திங்களை போன்ற குளிர் முகம் கொண்டவன்
தென்னாங்கூர் தலம் உறையும் நம் ( பாண்டு . . . )
ஞாயிறு அன்று ராஜ அலங்காரம்
ஞானம் புகட்டும் அவன் திருக்கோலம்
ஞானந்தகிரி நமக்கு காட்டிய ( பாண்டு . . . )
மீனாட்சி அம்மை பிறந்திட்ட ஊரில்
தானாட்சி செய்ய வந்தான் விட்டலன்
நாமாவளிகளை நாம் பாடி ஆடி ( பாண்டு . . . )
திருமகள் அலமேலு மங்கையுடனே
திருப்பதி பெறுமா ளாய் காட்சி தருவான்
சனி கிழமையில் கண்டு களித்தே ( பாண்டு . . . )
தமால மரத்திடை புல்லாங்குழல் ஊதி
கமலா கண்ணன் மயக்கினான் ராதையை
அந்த தமால மரம் உள்ள தென்னாங்கூரில் ( பாண்டு . . . )
பக்தியுடன் நாம் பாடி மகிழ்ந்திட
முக்தியும் அளிப்பான் முகுந்தன் அவனே
துக்காராம் போல் புகழ் பெறச் செய்வான் ( பாண்டு . . . )

No comments:

Post a Comment