Monday 22 October 2012

மதுரை மீனாக்ஷி உலகெங்கும் உனதாட்சி




கஞ்சி காமாட்சி
உன்னை காணும் திருக்காட்சி
நெஞ்சின் இருள் போக்கும்
அருள் நிலவு முகம் காட்டும் -  எழில் (கஞ்சி காமாட்சி )


மதுரை மீனாக்ஷி
உலகெங்கும் உனதாட்சி
கையில் கிளி ஏந்தி
கண்ணில் மீன் ஆட்சி - செய்யும் (மதுரை ...)

எத்தனையோ  மனக்குறைகள்
நேற்று வரை என்னுள்
அத்தனையும் கொட்டி விட்டேன்
இன்று உந்தன் கண்ணுள்
சித்தமெல்லாம் உன் நினைவே
சின்மயா ரூபிணியே
சுத்த மனம் ஆக்கிடுவாய்
ஸ்ரீ சக்ர நாயகியே  - தாயே (மதுரை ...)

பிள்ளை தமிழ் கேட்க நீ
மன்னன் மடி அமர்ந்தாய்
வள்ளலாக மாறி ஒரு
மாலையை அணிவித்தாய்
உள்ளமது உருகி நான்
உன்னை சரணடைந்தேன்
கள்ளத்தனம் நீக்கி என்
உள்ளமதை காப்பாய் - தாயே (மதுரை ...)

பச்சை கிளி கையில் கொண்டு
வளர்ந்த என் தாயே
இசையெல்லாம் தீர்த்தே
அருள்வாய் நீயே
அச்சோ என் வாழ்வதுவே
வீணாய் கழிந்ததுவே
இச்செகத்தோர்  எல்லாம் இனி
மெச்சிட செய்திடுவாய்  - தாயே (மதுரை ...)

நான் மாடக் கூடலிலே
கால் மாறி ஆடினாரே
மான் மழு ஏந்திய நம்
மதுரை சுந்தரேசர்
வான் மழை மேகம் கொண்டு
உன் எல்லையை காட்டினாரே
என் பிழை பொருத்தருள சொல்வாயம்மா (மதுரை ...)

எல்லாம் வல்ல சித்தராக
மதுரை மாநகர் வந்தாரே
கல் யானையை கரும்பை
தின்னச் செய்தாரே
கல்லான என் மனதை
கரைத்திட சொல்லம்மா
நல வழி படுத்தி எனை
நடத்திட சொல்லம்மா - தாயே (மதுரை ...)

பௌர்ணமி நாளில் உன்னை
தரிசிக்க வந்தேனே
சௌபாக்கியம் அனைத்தும் நீ
தந்திடுவாய் தாயே
சௌந்தரவல்லி உந்தன்
சுந்தர ரூபம் கண்டு
மௌனமாய் கரம் குவித்தேன்
மனம் மகிழ செய்வாயே - தாயே (மதுரை ...)

வைகை கரை ஓரத்திலே
வையகம் ஆண்டிடவே
தையலாய் வந்தவளே
தரணியை ஆண்டவளே
மையலை கொண்டாயே
மகேசன் அவன் மீதே
கைத்தலம் பற்றினையே
கன்னி மீனாக்ஷி  - தாயே (மதுரை ...)

வேண்டுவோர் வேண்டுவதை
விரும்பி அருள்பவளே
காண்போர் கல் மனதை
கரைத்தே அருள்பவளே
வான் புகழ் வைகை கரை
அமர்ந்த மீனாக்ஷி
யான் எனது என்பவற்றை
அழித்திடுவாய் தாயே - (மதுரை ...)

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪  written on 29-09-12

No comments:

Post a Comment