Friday 19 October 2012

நவராத்திரி நாயகியே வருக



நவராத்திரி நாயகியே வருக  17.10.2012



(பாக்கியாத லக்ஷ்மி பாரம்மா 
நம்மம்மா நீ சௌ
பாக்கியாத லக்ஷ்மி பாரம்மா - மெட்டில் பாடவும் )

நவராத்திரி நாயகியே வருக
    என் இல்லம் தேடி
நவராத்திரி நாயகியே வருக

முதல் நாள் தேவி மாஹேஸ்வரியே
முதல் நாள் தேவி மாஹேஸ்வரியே
மான் மழு ஏந்திய சிவ ரூப சுந்தரி  (நவராத்திரி நாயகியே ...)

வெண் பொங்கல் செய்து வைத்தேன் நானே (முறை பாடவும் )
கண் கொண்டு பாராய் காத்யாயனியே (நவராத்திரி நாயகியே ...)

மல்லிகை பூவை விரும்பி அணிபவள் (2 முறை )
அள்ளியே  அருளை வாரி வழங்குவாள் (நவராத்திரி நாயகியே ...)


இரண்டாம் நாள் தேவி கௌமாரியவள் (முறை )
வறண்ட நெஞ்சத்தில் பாலை பொழிபவள்  ((நவராத்திரி நாயகியே ...)

புளியோதரையை  புசிப்பாள் விரும்பி (2 முறை )
களிப்புறச் செய்வாள் நமை  அவள் விரும்பி (நவராத்திரி நாயகியே ...)

செவ்வரளி கொண்டு பூசிப்போமே  (2 முறை )
இவ்வுலகில் நாம் வாழ்வோம் இனிதே  (நவராத்திரி நாயகியே ...)


மூன்றாம் நாள் தெய்வம் வாராஹி அவள்  (2  முறை)
மூச்சுள்ள வரையில் முழுமையாய் காப்பாள் (நவராத்திரி நாயகியே ...)

சக்கரை பொங்கல் செய்து வைத்தாலே  (2  முறை )
அக்கறை யோடு   அருள்வாள் அவளே (நவராத்திரி நாயகியே ...)

சம்பங்கி மலரை சாற்றி  வழிபட (முறை )
வம்பு வழக்கின்றி காப்பாள் நம்மை  (நவராத்திரி நாயகியே ...)


நான்காம் நாள் தேவி மகாலக்ஷ்மியே ( முறை )
இவளை வழிபடநம்    கஷ்டங்கள்    தீர்ப்பாள்  (நவராத்திரி நாயகியே ...)

ஜாதி மல்லி  பூக்கொண்டு  பூஜிக்க  (2 முறை )
கோமளவல்லி என்றும் காப்பாள்  (நவராத்திரி நாயகியே ...)

கதம்ப சாதத்தை விரும்பியே உண்பாள் ( முறை )
ததும்பும் சந்தோஷம்  மனதில் தருவாள் (நவராத்திரி நாயகியே ...)


ஐந்தாம் நாள் தேவி வைஷ்ணவி அவளே  (2  முறை )
பைந்தமிழ் பாக்களால் பாடிட மகிழ்வாள்  (நவராத்திரி நாயகியே ...)

ததியோன்னத்தை விரும்பியே உண்பவள்  (2  முறை )
உத்தியோகத்தில்  உயர்வுகள் தரும் அன்னை (நவராத்திரி நாயகியே ...)

பாரி ஜாத  மலர் கொண்டு  பூஜிக்க  (2  முறை )
மாரியாய்   அருள்வாள்    நம் இல்லம்    செழிக்க (நவராத்திரி நாயகியே ...)



ஆறாம் நாள் தேவி இந்த்ராணி அவள் (முறை )
பார்த்தால் போதும் பாவங்கள் தீரும் (நவராத்திரி நாயகியே ...)

தேங்காய் சாதம்  தந்திட உடனே (2 முறை  )
தேங்கிய துயரங்கள் தீர்ப்பாள் அவளே (நவராத்திரி நாயகியே ...)

செம்பருத்தி  மலர்  சூடுவாள்  விரும்பி (2 முறை )
நம் மனம் மகிழ்ந்திட அருள்வாள்  அவளே  (நவராத்திரி நாயகியே ...)


ஏழாம் நாள் தேவி கலைவாணி அவள் (முறை )
தாழா கீர்த்தியை தருபவள் அவளே (நவராத்திரி நாயகியே ...)

எலுமிச்சை சாதம் விரும்பியே ஏற்பாள் (முறை )
வலுவாய் மனதை மாற்றி அமைப்பாள்  (நவராத்திரி நாயகியே ...)

மல்லிகை முல்லை மாலை அணிவிக்க (முறை)
நம்பிக்கை தந்து    நல் வழி  காட்டுவாள் (நவராத்திரி நாயகியே ...)

எட்டாம் நாள் தேவி துர்க்கை அவளே (முறை )
கைக்கெட்டா  கனியையும் கிட்டிடச் செய்வாள் (நவராத்திரி நாயகியே ...)

பாயச அன்னம் படைத்திட மகிழ்வாள் (2 முறை )
தாமச குணத்தை தகர்த்தே எறிவாள் (நவராத்திரி நாயகியே ...)

ரோஜா மலரால் பூஜித்தால் இவளை (2 முறை )
ஜோராய் சிரிப்பாள்  பூப்போல்  அவளே (நவராத்திரி நாயகியே ...)


ஒன்பதாம் நாளில் சாமுண்டா தேவி (2 முறை )
எப்போதும் நம்மை காப்பாள் அவளே (நவராத்திரி நாயகியே ...)

அக்கார வடிசல் அளிப்போம் நாமே (2 முறை )
எக்காலமும்  நமை காப்பாள் அவளே (நவராத்திரி நாயகியே ...)

தாமரைப் பூவை தந்திட மகிழ்வாள் (2 முறை )
வாடிய மனதின் வேதனை தீர்ப்பாள்  (நவராத்திரி நாயகியே ...)

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

No comments:

Post a Comment