Monday 22 October 2012

ஷீரடி சாயியை பணிந்திட உடனே




(பிரம்ம முராரி மெட்டில் பாடவும் )

ஷீரடி  சாயியை பணிந்திட உடனே
போராடி வாழ்வில் வெற்றியே பெறுவோம்
பார்புகழ் ஷீரடி சாயியை நினைக்க
ஓர் துன்பம் வாராதே வாழ்வில் தானே

விண்ணுல கம்விட்டு  மண்ணுல கம்வந்து
விந்தை புரிந்தார் சாயி நாதர்
கண் கொண்டு  அவரை  பார்த்த   உடனே
முன் ஜென்ம  வினைகளும்   தீரும்   உடனே

நற்பண்பை  போதிப்பார் நாளும் சாயி
பற்பல அதிசயம் புரிந்தவர் சாயி
கற்பக தருவாய் அருள்வார் சாயி
நற்பலன் நாளும் தருவார் சாயி

தத்தாத் ரேயரின்  அவதாரம் சாயி
சித்தாந்தம் அறிந்தவர் ஷீரடி  சாயி
எத்திக்கும் ஒலிக்கும் அவர்புகழ் நாளும்
பக்திக்கு பணிந்து அருள்வார் சாயி

வேப்ப மரத்தடி அமர்ந்திட்ட சாயி
வேதனை   தீர்க்கும்    நம் உயிர்   தாயே
வேதனையோடு சாயியை நாடிட
சாதனை புரிவோம் சாயியின் அருளால்

நம்பி    கை கூப்பி   சாயியை  வணங்கிட
நம்பிக்கை வளர்ப்பார் நம் மனத்துள்ளே
வெம்பி வெதும்பி வாடிடு வோரை
அம்பிகை உரு கொண்டு அள்ளியே அணைப்பார்



குருவாரம் தோறும் சாயியை வணங்கிட
ஒருவரம் மகிழ்ந்தே அவரும் அருள்வார்
ஒரு முறை ஷீரடி  சென்று வந்தால்
கரு முதல் காப்பார் ஷீரடி சாயி

கஷ்டத்தில் நாமே கண் மூடி வணங்கிட
இஷ்டமாய் வந்து இனிதே அருள்வார்
இஷ்ட தெய்வமாய் சாயியை வணங்கிட
கஷ்டங்கள் நீக்கி சுகமே தருவார்
Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪
10-10-12 

No comments:

Post a Comment