Wednesday 24 October 2012

விஜய தசமி (24.10.12) ஸ்பெஷல்

(நீல கடலின் ஓரத்தில்
நீங்கா இன்ப காவியமாம் - மெட்டு  )

விஜய தசமி (24.10.12) ஸ்பெஷல்

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
ஷீரடி சாயி ஆடுகவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
சிரித்த    படி  நீ    ஆடுகவே

சாயியே உன்னை வணங்குவோரை
தாய் போல் என்றும் காப்பவனே
வாயால் உன்னை பாடிடுவோம்
ஓயாமல் நீ காப்பாயே (ஆடுக . . . )

துவாரகா மாயி யில்  அமர்ந்தவனே
தாருகா வந்து ரிஷி நீயே
காருண்ய ரூபனே ஸ்ரீ சாயி
தாருமய்யா மன நிம்மதியே  (ஆடுக . . . )

வெப்ப மரத்தடி அமர்ந்தவனே
வேதனை தீர்த்து மகிழ்பவனே
வெய்யிலில் பயிர்  போல்  நான் வாடினேன்
வேரில் நீர் போல்  நீ அருள்வாய்  (ஆடுக . . . )

குருவாரம் வந்து வணங்கிடவே
ஒரு வரம் நீயே தருவாயே
மறுவாரம் நானே வருமுன்னே
தருவாயே நான் வேண்டியதை (ஆடுக . . . )

பச்சிளம் குழந்தைகள் நாங்களே
இசைகள் தீர்ப்பாய் ஸ்ரீ சாயி
பச்சைப்பயிர்  போல் வாழ்க்கையையே
பசுமையாய் மாற்றுவாய் ஸ்ரீ சாயி (ஆடுக . . . )

விஜய தசமியில் உன்னை வணங்க
ஜெயமே என்றும் வாழ்வினிலே
கஜபலம் தருவாய் ஸ்ரீ சாயி
நிஜ பக்தருக்கே ஸ்ரீ சாயி (ஆடுக . . . )

ஷீரடி வந்திட ஓர் முறையே
சீராகும் வாழ்வே உன்னாலே
போராடியோர் வாழ்வில் உயர்வாரே
தீராத துன்பமும் தீர்ந்திடுமே (ஆடுக . . . )

ஷீரடி வந்து சாயி உந்தன்
சீர் அடி பணிந்தே தொழுதோமே
சீராட்டி வளர்க்கும் தாய்போல
காப்பாற்றி  அருள்வாயே சாயியே (ஆடுக . . . )

No comments:

Post a Comment